

தொடர் மழை காரணமாக, சென்னை பல்கலைக்கழகம் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்தில் நாளை (டிச. 2) நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கு நாளை கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருப்பதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த 4 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை(டிச. 2) விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
டிட்வா புயல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, சென்னை கடற்கரையை நெருங்கியிருக்கும் நிலையில், இன்று காலை (டிச. 1) முதல் சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. நாளையும் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், சென்னை பல்கலைக் கழகத்தில் நாளை (டிச. 2) நடைபெறவிருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கனமழையால் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களில் மட்டும், நாளை (டிச. 2) நடைபெற இருந்த பருவத் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க: சென்னை, திருவள்ளூர் மாவட்டத்துக்கு இன்று ரெட் அலர்ட்!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.