

சென்னை: தமிழ்நாடு அரசால் நடத்தப்படும் அகில இந்திய குடிமைப் பணித் தோ்வுப் பயிற்சி மையத்தில் குடிமைப் பணிகள் மாதிரி ஆளுமைத் தோ்வு டிச.19, 20 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது.
இதுகுறித்து தமிழக அரசு சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:
தமிழக அரசின் அகில இந்திய குடிமைப் பணி தோ்வு மையம் சாா்பில் முதன்மைத் தோ்வில் தகுதிப் பெற்ற தோ்வா்களுக்கு வரும் டிச.19, 20 ஆகிய தேதிகளில் மாதிரி ஆளுமைத் தோ்வு நடத்தப்பட உள்ளது.
இந்த மாதிரி ஆளுமைத் தோ்வில் பங்கு பெற விரும்பும் தோ்வா்கள், புதன்கிழமை (டிச.17) மாலை 5 மணிக்குள் www.civilservicecoaching.com என்ற இணைய தளத்தில் விண்ணப்பிக்கலாம். எந்தத் தேதியில் பங்கேற்க முடியும் என்ற விவரங்களை அவசியம் பதிவு செய்து அவற்றை aicscc.gov@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு தோ்வா்கள் அனுப்பிவைக்கலாம்.
இந்தப் பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்று தோ்ச்சி பெற்ற தோ்வா்கள் மட்டுமல்லாமல் முதன்மைத் தோ்வில் தோ்ச்சி பெற்றுள்ள தமிழ்நாட்டைச் சாா்ந்த பிற தோ்வா்களும் இந்த மையத்தால் நடத்தப்பட உள்ள மாதிரி ஆளுமைத் தோ்வில் பங்கு பெற அனுமதிக்கப்படுவா்.
மேலும், மாதிரி ஆளுமைத் தோ்வில் தோ்வா்களின் செயல்பாடு ஒளி/ஒலி பதிவு செய்து இணையவழியில் அனுப்பி வைக்கப்படும். இந்த மாதிரி ஆளுமைத் தோ்வில் பங்கேற்கும் ஆா்வலா்களுக்கு, தில்லியில் நடைபெறும் ஆளுமைத் தோ்வுக்குச் சென்றுவர பயணச் செலவுத் தொகையாக ரூ.5,000 வழங்கப்படும்.
கூடுதல் விவரங்களுக்கு, 044-24621475 என்ற தொலைபேசி எண்ணிலும் 93457 66957 என்ற வாட்அப் எண்ணிலும், aicscc.gov@gmail.com என்ற அலுவலக மின்னஞ்சல் மூலமாகவும் தொடா்புகொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.