பட்ஜெட்: திருமணமாகும் பெண்களுக்கு 8 கிராம் தங்கம், ஒரு பட்டுப்புடவை!மதுரையில் சிறப்பு அரசு சட்டக் கல்லூரி அமைக்கப்படும்: பட்ஜெட்டில் அறிவிப்புதமிழக பட்ஜெட் 2026! அரசுப் பள்ளிகளில் சூப்பர் க்ளீன், சூப்பர் கேம்பஸ் திட்டம்!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு வெற்றி மடிக்கணினி!பட்ஜெட் 2026: பள்ளி மாணவர்களுக்கு நவீன சைக்கிள்! கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணினி! திட்டங்களை நிறைவேற்றுவதற்கு நிதித் தட்டுப்பாடு! அமைச்சர் மரிய வில்சன் தங்கம், வெள்ளி விலை அதிரடி உயர்வு! எவ்வளவு தெரியுமா?தமிழ்நாடு பட்ஜெட் 2026! முதல்முறையாக தாக்கல் செய்தார் அமைச்சர் மரிய வில்சன்! விவசாயிகளுக்காக ஒருமுறை அல்ல 100 முறைகூட கைதாவேன்! உதயநிதி ஸ்டாலின் பதிவு2029-இல் 5 டிரில்லியன் டாலா் பொருளாதாரமாக இந்தியா உருவெடுக்கும்: நிா்மலா சீதாராமன் எண்ம கைது மோசடிகளைத் தடுக்க தேசிய அளவில் நடவடிக்கைகள்- உச்சநீதிமன்றம் உத்தரவு இந்திய கொடி கட்டப்பட்ட கப்பல் மீது செங்கடலில் தாக்குதல்: 13 இந்திய மாலுமிகள் மீட்பு
/

மீண்டும் தர்மமே வெல்லும்: ஓபிஎஸ் பேட்டி

உள்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

News image
Updated On :12 பிப்ரவரி 2025, 1:18 pm IST

உள்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது என முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

தேனியில் செய்தியாளர்களுடன் பேசிய ஓபிஎஸ், "உள்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையத்திற்கு விசாரிக்கின்ற உரிமை இருக்கிறது என தேர்தல் ஆணையம் மூலமாகவே மதுரை உயர்நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

நீதிமன்றத்திற்கு என்ன அதிகாரங்கள் இருக்கிறதோ அந்த அதிகாரங்கள் தேர்தல் ஆணையத்திற்கும் இருக்கிறது என அந்த மனுவில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

அதனடிப்படையில் உள்கட்சி விவகாரங்களை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம் என்ற உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு வரவேற்கத்தக்கது.

'தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும், மீண்டும் தர்மமே வெல்லும்' என்று நிரூபணம் ஆகியிருக்கிறது" என்று தெரிவித்தார்.

உயர்நீதிமன்றம் தீர்ப்பு

அதிமுக விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்றம் இன்று (பிப். 12) உத்தரவிட்டுள்ளது.

அதிமுக விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிக்க விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரி, ஓ.பி. ரவீந்திரநாத், புகழேந்தி, கே.சி. பழனிசாமி உள்ளிட்டோர் தாக்கல் செய்திருந்த மனுவின் மீதான விசாரணையின் முடிவில், நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதிமுக உள்கட்சி விவகாரம், இரட்டை இலை சின்னம், புதிய தலைமை ஆகியவை குறித்து தேர்தல் ஆணையம் விசாரிக்க எந்தவித நிபந்தனையும் இல்லை என நீதிமன்றம் கூறியுள்ளது ஓபிஎஸ் தரப்புக்கு ஆதரவாகப் பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.