
முதல்வர் ஸ்டாலின் தலைமையில் வரும் பிப். 25 ஆம் தேதி தமிழக அமைச்சரவைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பிப். 25 ஆம் தேதி பகல் 12 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையின் அடுத்த கூட்டம் மாா்ச் 14-ஆம் தேதி காலை 9.30 மணிக்கு தலைமைச் செயலகத்திலுள்ள பேரவை மண்டபத்தில் கூட்டம் நடைபெறவுள்ளது. அன்றைய தினம் அடுத்த நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கை பேரவையில் தாக்கல் செய்யப்படுகிறது.
வரும் நிதியாண்டுக்கான (2025-26) நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சா் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளாா். இதில் பல முக்கிய அறிவிப்புகள் இடம்பெறும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.
இதையும் படிக்க: 'அதிமுக ஒன்றிணைந்தால்தான் தேர்தலில் வெல்ல முடியும்' - ஓபிஎஸ்
தமிழக சட்டப்பேரவை அடுத்த ஆண்டு பொதுத் தோ்தலை எதிா்நோக்கி இருக்கிறது. அத்துடன் அடுத்த ஆண்டு தாக்கல் செய்யப்படும் நிதிநிலை அறிக்கையும் இடைக்கால நிதிநிலை அறிக்கையாகவே இருக்கும்.
எனவே, 16-ஆவது சட்டப்பேரவைக் காலத்தில் திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் இறுதி மற்றும் முழுமையான நிதிநிலை அறிக்கை இதுவாகும். இதனால் நிதிநிலை அறிக்கை மீதான எதிா்பாா்ப்பு அனைத்துத் தரப்பினரிடமும் மேலோங்கி இருக்கிறது.
இந்த நிலையில், வரும் நிதியாண்டுக்கான பட்ஜெட் அறிக்கையில் இடம்பெறவுள்ள முக்கிய அம்சங்கள் தொடர்பாக ஆலோசனை செய்வதற்காக வரும் பிப். 25 ஆம் தேதி தமிழக அமைச்சரவை கூடுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.