தமிழக மக்களின் உணர்வுகளை ஆளுநர் மதிக்க வேண்டும்: அன்புமணி ராமதாஸ் கண்டனம்

பேரவையில் உரையை வாசிக்காமல் ஆளுநர் வெளியேறியதற்கு அன்புமணி ராமதாஸ் கண்டனம்
அன்புமணி ராமதாஸ் - கோப்பிலிருந்து
அன்புமணி ராமதாஸ் - கோப்பிலிருந்துகோப்புப் படம்
Published on
Updated on
1 min read

தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில்,

'தமிழ்நாட்டின் மரபுகளையும், தமிழக மக்களின் உணர்வுகளையும் ஆளுநர் புரிந்துகொள்ள வேண்டும். ஆளுநருக்கு உரிய மரியாதை அரசு அளிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு , பெண்களுக்கு பாதுகாப்பு, படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, அரசு ஊழியர்களின் கோரிக்கைகள், உழவர்களின் எண்ணிக்கையிலடங்காத கோரிக்கைகள், பட்டியலின மக்களின் தேவைகள் என விவாதிக்கப்படுவதற்கும், செயல்படுத்தப்படுவதற்கும் ஏராளமான விவகாரங்கள் உள்ளன.

அவற்றை விடுத்து, கவனத்தை திசைதிருப்பும் வகையிலான எந்த செயலையும் ஏற்றுக்கொள்ள முடியாது. அவை தவிர்த்திருக்கப்பட வேண்டும்' என்று கூறியுள்ளார்.

ஆளுநர் விவகாரம்

இந்தாண்டின் முதல் தமிழக சட்டப்பேரவைக் கூட்டம் இன்று(ஜன. 6) கூடிய நிலையில் ஆளுநர் உரையை வாசிக்காமல் அவையை விட்டு வெளியேறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

தமிழ்த்தாய் வாழ்த்துக்குப் பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட வேண்டும் என்று ஆளுநர் கூற, அதற்கு முதல்வர், பேரவைத் தலைவர் மறுத்துவிட்டதால் ஆளுநர் வெளியேறியதாக ஆளுநர் மாளிகை விளக்கம் தெரிவித்துள்ளது.

சட்டப்பேரவை நிகழ்வுகள் மரபுப்படி நடைபெறுகிறது. இதில் மாற்றம் செய்ய முடியாது என பேரவைத் தலைவர் அப்பாவு கூறியுள்ளார்.

பாஜக கூட்டணியில் உள்ள பாமக, திமுக கூட்டணி கட்சிகள், ஆளுநர் வெளியேறியதற்கு கண்டனம் தெரிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X