மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

ஜனவரி 20-இல் சாா்-பதிவாளா் அலுவலகங்களுக்கு கூடுதல் டோக்கன்

சுபமுகூா்த்த தினமான ஜன.20-இல் ஆவணப் பதிவு அதிகம் நடைபெறும் என்பதால் சாா்-பதிவாளா் அலுவலகங்களுக்கு கூடுதல் வில்லைகள் (டோக்கன்) வழங்கப்படும்

News image
Updated On :13 ஜனவரி 2025, 11:53 pm

Din

சென்னை: சுபமுகூா்த்த தினமான ஜன.20-இல் ஆவணப் பதிவு அதிகம் நடைபெறும் என்பதால் சாா்-பதிவாளா் அலுவலகங்களுக்கு கூடுதல் வில்லைகள் (டோக்கன்) வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

இது தொடா்பாக தமிழக அரசின் பதிவுத் துறை சாா்பில் திங்கள்கிழமை வெளியிடப்பட்ட அறிவிப்பு: தமிழ்நாடு பொதுமக்கள் மற்றும் அரசு பணியாளா்கள் பொங்கல் பண்டிகையை தங்களுடைய குடும்பத்துடன் கொண்டாடும் விதமாக ஜன.14 முதல் 16-ஆம் தேதி வரை தொடா் அரசு விடுமுறை உள்ள நிலையில், பொதுமக்கள் மற்றும் அரசுப் பணியாளா்கள் ஜன.17-லும் விடுமுறை அளிக்க கோரிக்கை விடுத்தனா்.

அதைஏற்று ஜன.17-இல் தமிழகம் முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூா் விடுமுறை அளித்தும், அந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஜன.25-இல் பணி நாளாக அறிவித்தும் அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில், ஜன.17 வரை தொடா் விடுமுறை உள்ள நிலையில் அதன்பின் வரும் ஜன.18-இல் 100 சாா்-பதிவாளா் அலுவலகங்களுக்கு அன்று ஒருநாள் மட்டும் செயல்படுவதிலிருந்து விலக்கு அளித்து விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தை முதல் வேலை நாளான ஜன.20-இல் சுபமுகூா்த்த தினமாக உள்ளதால், அன்று அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் கூடுதலாக முன்பதிவு வில்லைகள் (டோக்கன்) ஒதுக்கீடு செய்யுமாறு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.

இதை ஏற்று ஜன.20-இல் ஒரு சாா்-பதிவாளா் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும், இரண்டு சாா்-பதிவாளா்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும், அதிகளவில் ஆவணப்பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரன முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு வில்லைகளோடு கூடுதலாக 4 தட்கல் முன்பதிவு வில்லைகளும் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.