திமுகவுக்கு வாக்களித்தால் நெல் கொள்முதல் நிலையம்: பிரேமலதா பிரசாரம்ஆசிய விளையாட்டு: 10,000 மீட்டரை தொடர்ந்து 1,500 மீட்டரிலும் வெள்ளி வென்றார் குல்வீர் சிங்!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!முதல்வர் எந்த முகத்தை வைத்துக்கொண்டு பெண்கள் பாதுகாப்பைப் பற்றி பேசுகிறார்? - இபிஎஸ் கேள்வி!ஒரே நாளில் இரண்டாவது முறை குறைந்த தங்கம் விலை: சவரன் ரூ. 1,09,320-க்கு விற்பனை!கச்சா எண்ணெய் விலை உயர்வால் 6 மாதங்களில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சியில் இந்திய பங்குச் சந்தை!!ஆசிய விளையாட்டு: தடை தாண்டுதலில் வெண்கலம் வென்ற தமிழக வீராங்கனை வித்யா ராம்ராஜ்!மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் முதல்வர் விஜய் சாமி தரிசனம்!ஆசிய விளையாட்டில் வென்ற இளவேனில் வாலறிவனுக்கு ரூ. 1.33 கோடி வழங்கிய குஜராத் அரசு!மேடை நாகரிகம் கருதியே ஜெம் வீரமணி குறித்து பேசினேன்: அமைச்சர் லோகேஷ் தமிழ்ச்செல்வன் விளக்கம்

சென்னை சங்கமம் நிகழ்ச்சியை பார்வையிட்ட முதல்வர் ஸ்டாலின்!

சென்னையில் நடத்தப்பட்ட சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

Published On :

சென்னையில் நடத்தப்பட்ட சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் பார்வையிட்டார்.

கடந்த 13ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வந்த சென்னை சங்கமம் விழா வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைந்தது.

இந்த நிலையில் சென்னையில் உள்ள கோபுரப் பூங்காவில் இன்று நடைபெற்ற சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா கலை நிகழ்ச்சியை முதல்வர் ஸ்டாலின் நேரில் கண்டு மகிழ்ந்தார்.

அப்போது மல்லர் கம்பம் ஏறி சாகசம் செய்த மாற்றுத்திறனாளிகளை முதல்வர் ஸ்டாலின் மேடையேறிச் சென்று பாராட்டினார்.

இந்நிகழ்வின்போது கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் பொன்முடி, சேகர் பாபு, ஆ.ராசா எம்.பி., உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

பொங்கல் திருநாளையொட்டி, தமிழக அரசு சாா்பில் ஆண்டுதோறும் சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழா நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு விழாவை கீழ்ப்பாக்கம் பெரியாா் ஈ.வெ.ரா. நெடுஞ்சாலையில் உள்ள ஏகாம்பரநாதா் ஆலயத் திடலில் முதல்வா் மு.க.ஸ்டாலின் முழவுக் கருவியை இசைத்து தொடங்கிவைத்திருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.