கள்ளச்சாராயத்தை ஒழிப்பதில் காவல்துறையின் பணிகள் மட்டும் முக்கியமல்ல; சிந்தனை மாற்றமும் வேண்டும் - அமைச்சர் ஆதவ் அர்ஜுனாஉள்ளாட்சி தேர்தலில் தவெக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெறும் – அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல்குமார்இளைஞர்கள் ரீல்ஸ் செய்ய வேண்டும்; கேள்வி கேட்கக் கூடாது: மோடியின் விருப்பம் இது! - ராகுல் காந்திவங்கதேசம்: பாலியல் வன்கொடுமைக் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை!ஊடுருவல்காரர்கள் விருந்தினர்கள் அல்ல; உணவு, மருந்து கிடையாது: சுவேந்து அதிகாரிஎல்பிஜி விலை உயர்த்தப்பட்டதற்கு அரசியல் விலை கொடுக்க நேரிடும்: சரத் பவார் விமர்சனம்இந்தியா கூட்டணி ஆலோசனைக் கூட்டத்தில் 23 கட்சிகள் பங்கேற்பு!திமுக கூட்டணி என்ற ஒன்று இப்போது இல்லை: பெ. சண்முகம்
/

புதிய உச்சத்தை நோக்கி தங்கம் விலை! இன்றைய நிலவரம்!

தங்கம் விலையின் இன்றைய நிலவரம்..

News image
Updated On :17 ஜனவரி 2025, 10:01 am IST

தை மாதம் பிறந்துவிட்டாலே சுப முகூர்த்தங்களுக்கு குறைவிருக்காது என்ற நிலையில், தொடர்ந்து உயர்விலேயே இருந்த தங்கம் விலை 4-வது நாளாக சவரனுக்கு ரூ.480 உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று காலை வணிகம் தொடங்கியதும் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.480 உயர்ந்து ரூ.59,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்றுமுன்தினம் ஒரு சவரன் தங்கம் ரூ.58,720-க்கு விற்பனையாகி வந்த நிலையில், நேற்று மீண்டும் ரூ.59 ஆயிரத்தை எட்டியது.

போர் நிறுத்தம் போன்ற காரணங்களால் தங்கம் விலை குறையும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் காலையிலேயே கிராமுக்கு ரூ.80 அதிகரித்து மக்களுக்கு அதிர்ச்சியளித்தது.

ஜனவரி முதல் வாரத்தில் 57 ஆயிரம் ரூபாயில் இருந்த தங்கம் விலை படிப்படியாக உயர்ந்துவந்தது. தங்கம் விலை இன்னும் ஓரிரு நாள்களில் ரூ.60 ஆயிரத்தைத் தொட்டுவிடும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

வெள்ளி விலை

சென்னையில் இன்று வெள்ளி ஒரு கிராம் ரூ.1 உயர்ந்து ரூ.104-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூ.1,04,000க்கு விற்பனையாகி வருகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.