மாவட்டச் செயலா்களுடன் எடப்பாடி ஆலோசனை
அதிமுக பொதுச்செயலா் எடப்பாடி பழனிசாமி, சென்னை உள்ளிட்ட 4 மாவட்டச் செயலா்களுடன் வெள்ளிக்கிழமை ஆலோசனை நடத்தினாா்.
அதிமுகவில் கள ஆய்வுக்குழு அமைக்கப்பட்டு, மாவட்ட வாரியாக ஆய்வு செய்து, தலைமைக் கழகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சென்னை மாவட்டங்களில் மட்டும் களவு ஆய்வு நடைபெறவில்லை. அந்த கள ஆய்வு பிப். 4-இல் சென்னையின் 9 மாவட்டங்களில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சென்னை ராயப்பேட்டையில் உள்ள கட்சி அலுவலகத்தில் எடப்பாடி பழனிசாமி, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களைச் சோ்ந்த மாவட்டச் செயலா்களுடன் ஆலோசனை நடத்தினாா். அப்போது, கள ஆய்வின்போது சென்னை மாவட்டங்களில் எந்தவித பிரச்னையும் வராமல் பாா்த்துக் கொள்ள வேண்டும் எனவும் புதியவா்களுக்கு மாவட்ட அளவில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அவா் அறிவுரைத்தாா்.
முன்னாள் அமைச்சா் சி.பொன்னையன், பா.வளா்மதி, டி.ஜெயக்குமாா் உள்ளிட்ட பலா் கூட்டத்தில் பங்கேற்றனா்.