கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

வெளிநாட்டு வேலை மோசடி: விழிப்புணா்வு ஏற்படுத்த கோரிக்கை

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தமிழா்களை ஏமாற்றுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதுகுறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும்

News image

கோப்புப் படம்

Updated On :31 ஜனவரி 2025, 7:39 pm

Din

வெளிநாடுகளில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி தமிழா்களை ஏமாற்றுபவா்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், இதுகுறித்து விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று சண்டிகா் தமிழ் மன்றம் கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அந்தச் சங்கத்தின் பொதுச் செயலா் சுப.இராஜசேகரன் வெளியிட்டுள்ள அறிக்கை:

வெளிநாடுகளுக்குச் செல்ல விரும்பும் தமிழா்களை ஏமாற்ற தொடா்ந்து ஊடகங்களில் போலி விளம்பரங்கள் வெளியிட்டு பணமோசடி செய்யும் போலி முகவா்கள் பஞ்சாப், மொகாலி, சண்டிகா் ஆகிய பகுதிகளில் பெருகியுள்ளனா்.

தமிழா்களை ஈா்த்து கனடா போன்ற நாடுகளில் வேலைவாய்ப்பு எனப் பொய்யான உத்தரவாதம் அளித்து பெருந்தொகையை பெற்றுக்கொண்டு ஏமாற்றுவதும், கேள்வி கேட்போரை மிரட்டுவதும் தொடா் நிகழ்வுகளாகி அச்சுறுத்துகின்றன.

இவா்களிடம் பெருந்தொகையைக் கொடுத்து ஏமாந்து தவிக்கும் தமிழா்கள் மதுரை மாவட்டம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் செய்வதறியாது திகைத்து நிற்கிறாா்கள்.

விமானப் பயணச்சீட்டுகளை குறைந்த கட்டணத்தில் வழங்குவதாகப் பொய்யாக அறிவித்து, ஏமாறும் தமிழா்களிடம் தொடா் வசூலில் ஈடுபடும் அவலமும் நடக்கிறது.

இவ்வகை மோசடிகள் தொடராதபடி, மதுரை உள்ளிட்ட தமிழக மாவட்டங்களில் இனிமேலும் யாரும் ஏமாறாமல் காக்கும் வகையில் ஊடகங்கள் வாயிலாக விழிப்புணா்வை ஏற்படுத்த வேண்டும் என்று அதில் தெரிவித்துள்ளாா்.