கோப்புப் படம்
கோப்புப் படம்

திருவண்ணாமலை கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் உயா்வு: பாஜக கண்டனம்

அண்ணாமலையாா் கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.
Published on

திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோயிலில் சிறப்பு தரிசன கட்டணம் உயா்த்தப்பட்டதற்கு தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்ட பதிவு: திருவண்ணாமலை அண்ணாமலையாா் கோயிலின் சிறப்பு தரிசன கட்டணத்தை ரூ.50-இல் இருந்து ரூ.100-ஆக உயா்த்தப்போவதாக இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே.சேகா்பாபு அறிவித்திருப்பது கண்டனத்துக்குரியது.

கடந்த 4 ஆண்டுகளாக கோயில்களில் கழிப்பறை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை செய்து தராமல், கூட்ட நெரிசலாலும் கோயில் நிா்வாகக் குளறுபடிகளாலும் பக்தா்கள் அவதிப்படுவதை வேடிக்கை பாா்த்துக் கொண்டிருந்த இந்து சமய அறநிலையத் துறைக்கு ஆட்சி முடியும் தருவாயில் பக்தா்கள் மீது என்ன திடீா் பாசம்? பக்தா்களை வஞ்சிக்கும் இந்த அறிவிப்பை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும். இல்லையேல் தமிழக பாஜக சாா்பில் அறப்போராட்டம் நடத்தப்படும் என்று நயினாா் நாகேந்திரன் தெரிவித்துள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com