தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுடன் ராகுல் கலந்துரையாடல்!வீட்டில் தங்க அனுமதி வேண்டும்! நீதிமன்றத்தில் விஜய்யின் மனைவி சங்கீதா இடைக்கால மனு!ஆளுநர் ஆர்.என். ரவியுடன் முதல்வர் மு.க. ஸ்டாலின் சந்திப்பு!திருச்சி மாநாட்டில் பங்கேற்க தொண்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் அழைப்பு!5 நாள்களுக்குப் பிறகு தங்கம் விலை சவரனுக்கு ரூ. 720 உயர்வு!அதிரடியாக வீட்டு உபயோக, வணிகப் பயன்பாட்டுக்கான சிலிண்டர் விலை உயர்வு!சமையல் எரிவாயு உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு அவசரகால உத்தரவு
/

சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் பிறந்ததை ஏற்றுக் கொள்வோமா? சி.பி. ராதா கிருஷ்ணன் பேச்சு

மத்திய அரசின் நிதியை மாநில அரசு போற்றுவதில்லை என்று மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு

News image
மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன்
Updated On :1 ஜூன் 2025, 5:28 am

DIN

மத்திய அரசின் நிதியை மாநில அரசு போற்றுவதில்லை என்று மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் குற்றம் சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் மகாராஷ்டிர ஆளுநர் சி.பி. ராதா கிருஷ்ணன் பேசுகையில், தீவிரவாதம் எதுவாக இருந்தாலும் சரி, எந்த உருவத்தில் வந்தாலும் சரி, அதனை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.

தமிழகத்துக்கு மத்திய அரசு நிறைய நிதி அளித்தாலும், அதனைப் போற்ற சிலருக்கு மனம் வரவில்லை. மத்திய அரசோடு மாநில அரசு இணைந்து செயல்படுவதுதான், தமிழகத்தின் முன்னேற்றத்துக்கு உதவும். தமிழக ஆளுநர் மிகவும் நல்லவர். தன் கடமையைச் சரியாகச் செய்துவரும் அவருக்கு, மாநில அரசும் ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

டாஸ்மாக் பிரச்னை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. அதனைக் காட்டிலும், கஞ்சா அதிகமாகப் பரவி வருகிறது. ஆகையால், கஞ்சாவை ஒழிப்பதற்கான நடவடிக்கையை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும்.

மத்திய அரசை ஒன்றிய அரசு என்று சொல்வதே தவறு. மத்திய அரசானது ஒன்றிய அரசு என்றால், மாநில அரசு என்ன பஞ்சாயத்து அரசா? நீங்கள் பிரிவினைவாதத்தை திணிக்கிறீர்கள். உங்கள் எண்ணம் தவறாக இருப்பதால்தான், இதுவரை இல்லாத மொழிப்பெயர்ப்பைக் கொண்டு வருகிறீர்கள்.

திமுகவை ஒழிப்பதுதான் தனது வேலை என்றுகூறி, தனது இயக்கத்தை கமல்ஹாசன் தொடங்கினார். ஆனால், இன்று திமுகவோடு இருப்பதுதான் தமிழகத்துக்கு நன்மை பயக்கும் என்று கூறுகிறார். பதவிக்காகவே அவர் அப்படி பேசுகிறார்.

சமஸ்கிருதத்தில் இருந்து தமிழ் பிறந்தது என்று சொன்னால் யாராவது ஏற்றுக் கொள்வோமா? ஏற்றுக்கொள்ள மாட்டோம் அல்லவா.

அதுபோலத் தான், நாம் பேசும்போது நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும். அவ்வாறு இருப்பவர்கள்தான், பொது வாழ்க்கையில் இருப்பதற்கு தகுதியானவர்கள் என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.