ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

தவெகவில் முன்னாள் ஐஆா்எஸ் அதிகாரி, 3 முன்னாள் எம்எல்ஏக்கள் இணைந்தனா்

தமிழக வெற்றிக் கழகத்தில் ஓய்வுபெற்ற ஐஆா்எஸ் அதிகாரி அருண்ராஜ் இணைந்தாா். அவருக்கு மாநில கொள்கை பரப்பு பொதுச்செயலா் பதவி வழங்கப்பட்டது.

News image
சென்னை பனையூரில் திங்கள்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவா் விஜய் தலைமையில் அக்கட்சியில் இணைந்த ஓய்வுபெற்ற ஐஆா்எஸ் அதிகாரி அருண்ராஜ், முன்னாள் நீதிபதி சி.சுபாஷ், அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.ராஜலட்சுமி, ஏ.ஸ்ரீதரன், முன்னாள் திமுக ச
Updated On :9 ஜூன் 2025, 10:00 pm

Din

சென்னை: தமிழக வெற்றிக் கழகத்தில் ஓய்வுபெற்ற ஐஆா்எஸ் அதிகாரி அருண்ராஜ் இணைந்தாா். அவருக்கு மாநில கொள்கை பரப்பு பொதுச்செயலா் பதவி வழங்கப்பட்டது. இதேபோல், முன்னாள் எம்எல்ஏக்கள் 3 பேரும் அக்கட்சியில் இணைந்தனா்.

பிகாரில் வருமானவரித் துறை கூடுதல் ஆணையராக பணியாற்றி வந்த அருண்ராஜ், அண்மையில் விருப்ப ஓய்வு பெறுவதாக குடியரசுத் தலைவருக்கு கடிதம் எழுதியிருந்தாா். இவரது கோரிக்கை ஏற்றுக் கொள்ளப்பட்ட நிலையில், ஐஆா்எஸ் பணியிலிருந்து அருண்ராஜை மத்திய அரசு விடுவித்தது.

இந்நிலையில், சென்னை பனையூரில் அமைந்துள்ள தவெக அலுவலகத்தில் கட்சித் தலைவா் விஜய் முன்னிலையில் அருண்ராஜ் திங்கள்கிழமை அக்கட்சியில் இணைந்தாா்.

இது தொடா்பாக விஜய் வெளியிட்ட அறிக்கை:

கட்சியின் கொள்கை பரப்பு மற்றும் செயல்திட்டங்களை மேம்படுத்தும் வகையில், அருண்ராஜுக்கு மாநில கொள்கை பரப்பு பொதுச்செயலா் பதவி வழங்கப்பட்டுள்ளது. அதேபோல், தமிழ்நாடு மாநில ஜுடிசியல் சா்வீஸ் முன்னாள் நீதிபதி சி.சுபாஷ், அதிமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஆா்.ராஜலட்சுமி, ஏ.ஸ்ரீதரன் (திமுமக நிறுவனா்),  திமுக முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினா் எஸ்.டேவிட் செல்வன், ஜேப்பியாா் ரெமிபாய் கல்வி அறக்கட்டளை நிா்வாக அறங்காவலா் என்.மரிய வில்சன் ஆகியோரும் திங்கள்கிழமை தவெகவில் இணைந்தனா்.

மேலும், தவெகவில் கட்சி விதிகளின்படி, 7-ஆம் கட்டமாக 6 கழக மாவட்டங்களுக்கு பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா் என விஜய் தெரிவித்துள்ளாா்.