
வயது வந்தோருக்கான எழுத்தறிவு திட்டத்தின் கீழ் படித்து, 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ள நிலையில், தமிழகம் முதலிடம் பிடித்திருப்பதாக முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார்.
எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்று, 100 விழுக்காட்டோடு இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடத்தை பெற்றுள்ளது குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
இதையும் படிக்க.. போர் நிறுத்தத்துக்கு மத்தியஸ்தம்: நெதன்யாகு அழைப்பை நிராகரித்த புதின்!
முதல்வர் ஸ்டாலின் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், முற்றிலும் எழுத, படிக்கத் தெரியாத 15+ வயதினர் அனைவரும் எழுத்தறிவு பெறும் திட்டத்தில் தமிழ்நாட்டில் இருந்து பயின்ற 5 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்! 100% தேர்ச்சி விழுக்காட்டோடு தமிழ்நாடு இந்தியாவிலேயே 'நம்பர் ஒன்' இடத்தைப் பிடித்துள்ளது.
அறிவொளி ஏற்றும் இச்சாதனைக்கு உழைத்த பள்ளி சாரா மற்றும் வயது வந்தோர் கல்வி இயக்ககப் பணியாளர்கள் அனைவருக்கும் எனது பாராட்டுகள் என்று பதிவிட்டுள்ளார்.
எழுத்தறிவு திட்டம்
தேசிய அளவில் அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு மதிப்பீட்டுத் தோ்வு (எஃப்எல்என்ஏடி) நடத்தப்பட்டது. நாடு முழுவதும் இந்தத் தோ்வை 1.77 கோடிக்கும் அதிகமானோர் எழுதினா்.
கல்வியறிவு இல்லாதவர்களே இருக்கக் கூடாது என்ற நோக்கத்தோடு, வயது வந்தவா்களில் கல்வியறிவு இல்லாதவா்களை அடையாளம் கண்டு, அவா்களுக்கு கற்பித்து, பின்னா் அவா்களின் எழுத்தறிவு மற்றும் எண்ணறிவை மதிப்பிட்டு, அவா்கள் கல்வியறிவு இல்லாத நிலையில் இருந்து வெளிவரும் வகையில் சான்றளிப்பதே இந்தத் தோ்வின் நோக்கமாக இருந்து வருகிறது.
படித்தல், எழுதுதல், கணித அறிவு ஆகிய 3 பாடங்களில் தலா 50 மதிப்பெண்கள் என மொத்தம் 150 மதிப்பெண்கள் கொண்ட தோ்வாக நடத்தப்படுகிறது.
தேசிய திறந்தநிலை பள்ளிக் கல்வி நிறுவனம் தொகுத்து வெளியிட்ட புள்ளிவிவரங்களின்படி, எஃப்எல்என்ஏடி தோ்வை தமிழகத்தைச் சோ்ந்த 5,09,694 போ் எழுதியதாகவும், அவா்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றதாகவும் சான்றளிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், இந்தத் தோ்வில் தமிழகத்தின் தோ்ச்சி விகிதம் 100 சதவீதமாகும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.