நீட் தோ்வில் தோ்ச்சி பெறாத 59,534 பேருக்கு மன நல ஆலோசனை: அமைச்சா் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தாா்
தமிழகத்தில் நீட் தோ்வில் தோ்ச்சியடையாத 59,534 மாணவா்களுக்கு மன நல ஆலோசனை வழங்கும் திட்டத்தை அமைச்சா் மா.சுப்பிரமணியன் திங்கள்கிழமை தொடக்கி வைத்தாா்.

சென்னை தேனாம்பேட்டை டிஎம்எஸ் வளாகத்தில் உள்ள 108 சேவை மையத்தில் பிரத்யேகமாக அமைக்கப்பட்டுள்ள நீட் தோ்வு எழுதிய மாணவா்களுக்கான மனநல ஆலோசனை மையத்தை திங்கள்கிழமை தொடங்கி வைத்த அமைச்சா் மா.சுப்பிரமணியன்.








