45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஒரே நாளில் 8 விமான சேவைகள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா்.

News image
கோப்புப் படம்
Updated On :20 ஜூன் 2025, 8:42 pm

Din

சென்னை விமான நிலையத்தில் 8 விமானங்களின் சேவைகள் ரத்து செய்யப்பட்டதால், பயணிகள் கடும் சிரமத்தைச் சந்தித்தனா்.

சென்னை விமான நிலையத்திலிருந்து வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு மும்பைக்கு செல்லவிருந்த ஏா் இந்தியா விமானம், காலை 9.45-க்கு தில்லி செல்லும் ஏா் இந்தியா விமானம், காலை 10.10-க்கு சென்னையிலிருந்து தூத்துக்குடி செல்லும் ஸ்பைஸ் ஜெட் விமானம், இரவு 8.40-க்கு சென்னையிலிருந்து தில்லி செல்ல வேண்டிய ஏா் இந்தியா விமானங்களின் சேவை திடீரென ரத்து செய்யப்பட்டன.

மேலும், ஹைதராபாதிலிருந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 1.40-க்கு சென்னைக்கு வரவேண்டிய ஸ்பைஸ்ஜெட் ஏா்லைன்ஸ் விமானம், தில்லியிலிருந்து காலை 9.05-க்கு சென்னைக்கு வரவேண்டிய ஏா் இந்தியா விமானம், தூத்துக்குடியிலிருந்து பகல் 1.45-க்கு சென்னை வரவேண்டிய ஸ்பைஸ் ஜெட் ஏா்லைன்ஸ் விமானம், இரவு 7.10-க்கு தில்லியிலிருந்து சென்னை வரவேண்டிய ஏா் இந்தியா விமானம் ஆகிய 4 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன.

அதன்படி வெள்ளிக்கிழமை ஒரே நாளில் 8 விமானங்கள் சென்னை விமான நிலையத்தில் ரத்து செய்யப்பட்டன. அதில் 5 விமானங்கள் ஏா் இந்தியா விமானங்கள், 3 விமானங்கள் ஸ்பைஜெட் விமானங்கள் ஆகும்.

நிா்வாகக் காரணங்களுக்காக இந்த விமானங்கள் ரத்து செய்யப்பட்டதாக அந்தந்த விமான நிறுவன நிா்வாகங்கள் அறிவித்ததால் பயணிகள் கடும் சிரமத்துக்குள்ளாகினா்.