ஊரக வளர்ச்சி உதவி இயக்குநர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதற்கான உத்தரவை கூடுதல் தலைமைச் செயலர் ககன்தீப் சிங் பேடி இன்று(ஜூன் 24 )பிறப்பித்துள்ளார். அவரது உத்தரவு விவரம்:
திண்டுக்கல் மாவட்ட ஊராட்சிகள் உதவி இயக்குநராக இருந்த நாகராஜன் ஊதிய வேலைவாய்ப்பு உதவி திட்ட அலுவலராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஊதிய வேலைவாய்ப்பு உதவி திட்ட அலுவலராக இருந்த இசக்கிப்பன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை (வீடுகள்) உதவி திட்ட அலுவலராக மாற்றப்பட்டுள்ளார்.
எஸ். சரவணபவா விழுப்புரம் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்கட்டமைப்பு உதவி திட்ட அலுவலராகவும் மா. மகேஸ்வரன் திருப்பூர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்கட்டமைப்பு உதவி திட்ட அலுவலராகவும் எம்.பிரகாஷ் திண்டுக்கல் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்கட்டமைப்பு உதவி திட்ட அலுவலராகவும் கி.ராமசாமி திருவண்ணாமலை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை உள்கட்டமைப்பு உதவி திட்ட அலுவலராகவும் மாற்றப்பட்டுள்ளார்.
அரசாணையில் குறிப்பிடப்பட்டுள்ள எம்.பி.லதா, இ.மரியதாஸ், கே.அண்ணாதுரை ஆகியோர்களுக்கு வழங்கப்பட்ட பணியிட மாறுதல்களை ரத்து செய்யப்பட்டுள்ளது.
அதேபோல, பணியிட மாறுதல் வழங்கப்பட்ட அலுவலர்கள் பதில் நபரை எதிர்பார்க்காமல் பணியிலிருந்து விடுவிக்கப்பட்டு புதிய பணியில் உடனடியாக சேர அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மணல் கடத்தலில் தொடா்பு: தலைமை காவலா்கள் 4 போ் பணியிட மாற்றம்

பெண் எஸ்.ஐ., காவலா் பணியிட மாற்றம்

தமிழக காவல் துறையில் 13 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்

ஐபிஎஸ் அதிகாரிகள் 10 பேர் பணியிட மாற்றம்!
விடியோக்கள்

சன்ரைசர்ஸ் vs ராஜஸ்தான்: எலிமினேட்டரில் களம் யாருக்குச் சாதகம்? | SRH vs RR | Klaasen |

தொண்டர்களுக்கு திருமா வைத்த வேண்டுகோள்! | VCK | DMK | TVK

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike



