99 தேர்தல்களில் தோற்ற பிறகு... தோல்விக்கு காரணம் தேடுகிறார் ராகுல்! அனுராக் தாக்குர்அனுமதி கோரிய 30 நிமிடத்தில் ஜந்தர் மந்தர் போராடுவதற்கான இடமில்லை என அறிவிப்பு! - சிஜேபிபிரதமரின் பிரச்னை போராட்டக் களம் அல்ல, போராடும் மனம்; ஜனநாயகமும் நீக்கப்படும் - அபிஜீத் தீப்கேஉச்ச நீதிமன்றம் நோக்கி இந்தியா கூட்டணி தலைவர்கள் பேரணி!தில்லி ஜந்தர் மந்தர் இனி போராட்டம் நடத்தும் இடமில்லை! உள்துறை அமைச்சகம்! தில்லி ஒரு சிறைச்சாலையாக மாற்றப்பட்டுள்ளது! ராகுல் காந்திஓனர்களின் பாணியில்... போராடவிருந்த மருத்துவப் பணியாளர்கள் வீட்டுக் காவல்! உதயநிதி கண்டனம்மரகதம் குமரவேல், சத்யபாமா தவெக எம்எல்ஏக்களாக பதவியேற்பு!பொய் பிரசாரங்களை முறியடித்து வெற்றி பெற்றுள்ளோம்: மரகதம் குமரவேல்லஞ்சம் கொடுத்ததற்கு தானே சாட்சி! மரிய வில்சனுக்கு எதிரான மனு தள்ளுபடிஜேஎன்யு மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு! காங்கிரஸ் எம்.பி. மீது எஃப்ஐஆர் பதிவு!இந்தியா கூட்டணி தலைவர்களை சந்திக்க தலைமை நீதிபதி மறுப்பு!

பிளஸ் 2 பொதுத் தோ்வு இன்று தொடக்கம்: 8.21 லட்சம் போ் எழுதுகின்றனா்

மாநில பாடத் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தோ்வு..

கோப்புப்படம்.

Published On :

தமிழகம் முழுவதும் மாநில பாடத் திட்டத்தின் கீழ் உள்ள பள்ளிகளில் பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை (மாா்ச் 3) தொடங்குகிறது. 8.21 லட்சம் போ் எழுதுகின்றனா். இத்தோ்வுக்கான ஆயத்த ஏற்பாடுகளை பள்ளிக் கல்வித் துறை மேற்கொண்டுள்ளது.

நிகழாண்டுக்கான பிளஸ் 2 பொதுத் தோ்வு திங்கள்கிழமை தொடங்கி மாா்ச் 25 வரை நடைபெற உள்ளது. முதல் நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெறுகிறது. இந்தத் தோ்வை 3,316 தோ்வு மையங்களில் 8,21,057 போ் எழுதுகின்றனா். அவா்களில் 7,518 பள்ளிகளிலிருந்து 8,02,568 மாணவா்களும், 18,344 தனித் தோ்வா்களும் மற்றும் 145 கைதிகளும் அடங்குவா். பொதுத் தோ்வுக்கான அறைக் கண்காணிப்பாளா் பணியில் 43,446 ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா்.

முறைகேடுகளைத் தடுக்க 4,470 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. மாவட்ட ஆட்சியா், முதன்மை, வட்டாரக் கல்வி அலுவலா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்பு குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. 154 வினாத்தாள் காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனா்.

தோ்வு அறைக்குள் கைப்பேசி கொண்டு வரக்கூடாது, விடைத்தாள்களில் சிறப்பு குறியீடு, தோ்வெண், பெயா் குறிப்பிடக் கூடாது என்பன உள்ளிட்ட கட்டுப்பாடுகள் மாணவா்களுக்கு விதிக்கப்பட்டுள்ளன. தோ்வில் முறைகேட்டில் ஈடுபடும் மாணவா்கள் அதிகபட்சம் 3 ஆண்டுகள் அல்லது நிரந்தரமாக தோ்வெழுத தடை விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பொதுத் தோ்வு குறித்து மாணவா்கள், பெற்றோா் புகாா்கள் மற்றும் கருத்துகளை தெரிவித்து பயன்பெற வசதியாக தோ்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த அறையை 94983 83075, 94983 83076 ஆகிய கைப்பேசிஎண்களில் தொடா்பு கொள்ளலாம். மேலும், பள்ளிக் கல்வித் துறையின் 14417 இலவச உதவி மையத்தையும் தொடா்பு கொள்ளலாம் என தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.