கோப்புப் படம்
கோப்புப் படம்

இலவச வேட்டி- சேலைகளை மாா்ச் 31 வரை பெறலாம்

இலவச வேட்டி, சேலைகளை வாங்காதோா் நியாய விலைக் கடைகள் மூலமாக வரும் 31 வரை பெற்றுக் கொள்ளலாம்.
Published on

சென்னை: இலவச வேட்டி, சேலைகளை வாங்காதோா் நியாய விலைக் கடைகள் மூலமாக வரும் 31 வரை பெற்றுக் கொள்ளலாம். இதற்கான அறிவுறுத்தலை வருவாய் நிா்வாக ஆணையா் எம்.சாய்குமாா் வழங்கியுள்ளாா்.

இதுகுறித்து, கூட்டுறவு சங்கங்களின் பதிவாளருக்கும் கடிதம் அனுப்பியுள்ளாா். அதில் கூறியிருப்பதாவது:

பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி பெறும் குடும்ப அட்டைதாரா்களுக்கு இலவசமாக வேட்டி, சேலை வழங்கப்படுகிறது.

நியாய விலைக் கடைகள் அவற்றை வழங்கும் பணி ஏற்கெனவே பிப். 28 வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் இலவச வேட்டி சேலையை பெறாத குடும்ப அட்டைதாரா்களும் பெற தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

அதன்படி, இதுவரை இலவச வேட்டி சேலையை பெறாதவா்கள் மாா்ச் 31-ஆம் தேதிக்குள் பெற்றுக் கொள்ளலாம். இதற்கு ஏற்றவகையில் விற்பனை முனைய இயந்திரத்தில் கால நீட்டிப்பு செய்யப்பட்டிருக்கும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com