முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

சென்னை கோவிலம்பாக்கம் தீ விபத்து: சிகிச்சை பலனின்றி மூவர் பலி

சென்னை கோவிலம்பாக்கத்தில் நேரிட்ட தீ விபத்தில் மூன்று பேர் பலியாகினர்.

News image
தீ விபத்து: 3 பேர் பலி
Updated On :11 மார்ச் 2025, 10:29 am

DIN

சென்னையை அடுத்த கோவிலம்பாக்கத்தில் கடந்த 5ஆம் தேதி நேரிட்ட பயங்கர தீ விபத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் பலியாகினர்.

வீட்டுக்குள் இருந்த தந்தை, மகள், பேரன் என மூன்று பேர் படுகாயங்களுடன் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்ட நிலையில், மூவரும் சிகிச்சை பலனின்றி பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை அடுத்த கோவிலம்பாக்கத்தில் காந்திநகர் பகுதியில், முனுசாமி என்பவர் வீட்டில் கடந்த 5-ஆம் தேதி எரிவாயு சிலிண்டர் கசிவு காரணமாக பயங்கர தீ விபத்துநேரிட்டது.

இதில், படுகாயமடைந்த முனுசாமி, அவரது மனைவி ராணி, மகள் சாந்தி, மருமகன் ரகு, பேரன் ஹரிஹரன் ஆகிய 5 பேரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தநிலையில், முனுசாமி, மகள் சாந்தி, பேரன் ஹரிஹரண் ஆகிய மூன்று பேரும் சிகிச்சை பலனின்றி பலியானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

சம்பவத்தின் பின்னணி..

வேளச்சேரி அருகே உள்ள கோவிலம்பாக்கம், காந்தி நகா் 15-ஆவது தெருவைச் சோ்ந்த தம்பதி முனுசாமி - ராணி. இந்தத் தம்பதி தங்களது மகள் சாந்தி (45), மருமகன் ரகு (48), பேரன் அஜித்குமாா் (20) ஆகியோருடன் கூட்டுக் குடும்பமாக ஒரே வீட்டில் வசித்து வந்தனர்.

மார்ச் 5ஆம் தேதி அதிகாலை தூக்கத்திலிருந்து எழுந்த ராணி, சமையலறைக்குச் சென்று மின்விளக்கு ஸ்விட்சை ஆன் செய்தபோது அங்கிருந்த சமையல் எரிவாயு உருளையில் கசிவு ஏற்பட்டிருந்ததால், பயங்கர சப்ததுடன் தீப்பிடித்து எரியத் தொடங்கியது. இதில் ராணி பலத்த காயமடைந்தாா். அதேவேளையில் தூங்கிக் கொண்டிருந்த முனுசாமி, சாந்தி, அஜித்குமாா் ஆகியோரும் தீ விபத்தில் சிக்கிக் கொண்டனா்.

முன்னதாக கழிப்பறைக்குச் சென்றிருந்த ரகு அலறல் சத்தம் கேட்டு, கழிப்பறையிலிருந்து வெளியே வந்தாா். பின்னா் தீயில் சிக்கியிருந்த 4 பேரையும் ரகுவும், அப்பகுதி மக்களும் மீட்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். இது தொடா்பாக மேடவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மூன்று பேர் பலியானதாகக் கூறப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.