திருச்சி கிழக்கு உள்பட தாராபுரம், மதுராந்தகம், பெருந்துறை, அம்பாசமுத்திரம் என 5 தொகுதிகள் காலியானதாக அறிவிப்பு!உசிலம்பட்டி: மின்னல் தாக்கி 3 கூலித் தொழிலாளிகள் பலிதொகுதி நலனுக்காக அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தேன் : இசக்கி சுப்பையா விளக்கம் அதிமுக எம்.எல்.ஏ.க்களால் தவெக நம்பகத்தன்மை கெடும்: திருமாவளவன் ஜூன் 4-இல் பள்ளிகள் திறப்பு!ஆம்! +2 இயற்பியல் விடைத்தாள் மாறிவிட்டது: ஒப்புக்கொண்ட சிபிஎஸ்இ; பெற்றோர் கவலைதமிழ்நாட்டிற்கு புதிய டிஜிபி: 3 பேர் கொண்ட பட்டியலுக்கு யுபிஎஸ்சி ஒப்புதல்!9-ம் வகுப்புக்கு மும்மொழி: சிபிஎஸ்இ அறிவிப்புக்கு அண்ணாமலை எதிர்ப்பு!
/

பிரதான் பிளாக்மெயில் செய்கிறார்; ரூ. 10,000 கோடி கொடுத்தாலும் வேண்டாம்! - முதல்வர் மு.க. ஸ்டாலின் பேச்சு

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திமிராகப் பேசுகிறார் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

News image
Updated On :11 மார்ச் 2025, 1:20 pm IST

மத்திய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் திமிராகப் பேசுகிறார் என முதல்வர் மு.க. ஸ்டாலின் கூறியுள்ளார்.

செங்கல்பட்டு மாவட்டத்தில் ரூ.1,285 கோடியிலான புதிய திட்டப் பணிகளுக்கு முதல்வர் மு. க. ஸ்டாலின் இன்று(மார்ச் 11) அடிக்கல் நாட்டினார். ஏற்கெனவே நிறைவடைந்துள்ள திட்டங்களை மக்கள் பயன்பாட்டுக்காகத் திறந்து வைத்த அவர், செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை பயனாளர்களுக்கு வழங்கினார்.

இதன்பின்னர் விழாவில் முதல்வர் பேசியதாவது:

"சில தடைகள் மட்டும் இல்லையென்றால் தமிழ்நாடு இன்னும் வேகமாக வளர்ச்சி அடைந்திருக்கும். நேற்று நாடாளுமன்றத்தில் நடந்ததை நீங்கள் டிவியில் பார்த்திருப்பீர்கள். அதாவது ஹிந்தி, சமஸ்கிருதத்தை ஏற்றுக்கொண்டால்தான் தமிழ்நாட்டுக்குத் தர வேண்டிய ரூ. 2,000 கோடியைத் தருவோம் என்று திமிராகப் பேசுகிறார் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான். தேசிய கல்விக் கொள்கை என்ற பெயரில் தமிழ்நாட்டின் வளர்ச்சியை ஒட்டுமொத்தமாக அழித்து ஒழித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள்.

கல்விக்குள் மாணவர்களை கொண்டுவர முயற்சி செய்யாமல் கல்வியிலிருந்து மாணவர்களை நீக்கம் செய்வதற்கான அத்தனை திட்டங்களும் புதிய கல்விக் கொள்கையில் இருக்கிறது. கல்வியை தனியார்மயமாக்குவது, பணக்காரர்களுக்கு மட்டுமே உயர் கல்வி என்ற நிலையை ஏற்படுத்துவது, கல்வியை மதவாதத்துடன் புகுத்துவது, குழந்தைகளுக்குக்கூட பொதுத் தேர்வு, பொறியியல் படிப்புகளுக்கு நீட் மாதிரியான நுழைவுத் தேர்வு... இப்படி நிறைய இருக்கிறது.

கல்வியில் மத்திய அரசின் அதிகாரத்துக்கு இந்த கொள்கை வழிவகுக்குகிறது. இதற்கெல்லாம் ஒப்புக்கொண்டால்தான் கல்வி நிதியைத் தருவோம் என்று அமைச்சர் பிரதான் பிளாக்மெயில் செய்கிறார். அதனால்தான் ரூ. 2,000 கோடி அல்ல, ரூ. 10,000 கோடி தந்தாலும் உங்களுடைய நாசகார நாக்பூர் திட்டத்தை ஏற்றுக்கொள்ளமாட்டோம் என்று தெளிவாக திட்டவட்டமாகச் சொன்னேன். இந்த மேடையிலும் இதனை உறுதியாக சொல்லிக்கொள்கிறேன்.

தமிழ்நாட்டைச் சார்ந்தவர்கள் அநாகரிகமானவர்கள் என்று அமைச்சர் பிரதான் நாவடக்கம் இல்லாமல் பேசியிருக்கிறார். அரை மணி நேரத்தில் அவர் பேசியதை திரும்பப் பெற வைத்திருக்கின்றனர் நம் தமிழ்நாட்டு எம்.பி.க்கள். அவர்களுடைய போர்க் குரலுக்கு என்னுடைய வாழ்த்துகள். அதிமுக உறுப்பினர்களைப்போல் அல்லாமல் யாருக்கும் பயப்படாமல் உரிமைக்காக போராடுவோம் என்று திமுக எம்.பி.க்கள் நிரூபித்திருக்கிறார்கள்" என்று பேசியுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.