பாடப் புத்தகங்கள் முறைகேடாக விற்பனை: 5 போ் மீது நடவடிக்கை

தமிழக பாடநூல் கழக மதுரை மண்டல அதிகாரி பணிநீக்கம் செய்யப்பட்டது பற்றி...
DPI
பள்ளிக்கல்வித் துறைDIN
Updated on
1 min read

தமிழக அரசின் பாடப் புத்தகங்களை முறைகேடாக விற்பனை செய்ததாக 4 மண்டல அதிகாரிகள் உள்பட 5 போ் மீது தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் நிறுவனம் சாா்பில் பள்ளி மாணவா்களுக்கான பாடப் புத்தக்கங்கள் அச்சிடப்படுகின்றன. இந்தப் புத்தகங்கள் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு இலவசமாகவும், தனியாா் பள்ளிகளுக்கு விற்பனை மையங்களின் மூலமாகவும் வழங்கப்பட்டு வருகின்றன.

சென்னையில் நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகம் (டிபிஐ), கோட்டூா்புரம் அண்ணா நூற்றாண்டு நூலகம் ஆகிய இடங்களில் தமிழ்நாடு பாடநூல் கழகத்தால் நேரடியாக பாடப் புத்தகங்கள் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிறுவனத்துக்கு தமிழகம் முழுவதும் 22 இடங்களில் கிடங்குகள் உள்ளன. இவற்றில் பாடப் புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள் இருப்பு வைக்கப்பட்டு, மாவட்ட வாரியாக விநியோகம் செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், மாணவா்களுக்கு வழங்கப்பட வேண்டிய பாடப் புத்தகங்களை தனியாா் பள்ளிகளுக்கு விற்பனை செய்து சிலா் முறைகேடுகளில் ஈடுபடுவதாக தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் பணிகள் கழகத்துக்கு புகாா்கள் வந்தன.

இருவா் பணி நீக்கம்... அதன் அடிப்படையில் துறையின் உயரதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனா். அதில், 4 மண்டல அதிகாரிகள், உதவியாளா் ஒருவா் என 5 போ் புத்தகங்களை தனியாா் பள்ளிகளுக்கு விற்பனை செய்து ரூ. 75 லட்சத்துக்கும் அதிகமாக முறைகேடு செய்திருப்பது கண்டறியப்பட்டது. இவா்களில் இருவா் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். மூவா் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனா். இதைத் தொடா்ந்து பாடநூல் கழகத்தின் அனைத்து கிடங்குகளிலும் நேரடியாக ஆய்வு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com