பூந்தமல்லி - முல்லைத் தோட்டம் இடையே மெட்ரோ ரயிலை இயக்கி சோதனை!
பூந்தமல்லி - முல்லைத் தோட்டம் இடையே மெட்ரோ ரயில் இயக்கி சோதனை...


பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத்தோட்டம் நிலையத்துக்கு இடையே மெட்ரோ ரயிலை இயக்கி அதிகாரிகள் சோதனை செய்தனர்.
சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் வழித்தடம் 1 மற்றும் 2-ல் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கையை கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரயில் திட்டம் கட்டம் II-ல் 118.9 கி.மீ நீளத்திற்கு மேலும் 3 வழித்தடங்களில் 128 மெட்ரோ ரயில் நிலையங்கள் அமைக்க திட்டமிடப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றது.
பூந்தமல்லி பணிமனை நிலையத்திலிருந்து கலங்கரை விளக்கம் வரை 26.1 கி.மீ நீளம் கொண்ட வழித்தடத்தில் போரூர் வரையிலான மேம்பாலப் பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. மேலும், இந்தாண்டு டிசம்பர் மாதத்துக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத்தோட்டம் நிலையத்துக்கு இடையே அனைத்துப் பணிகளும் நிறைவடைந்துள்ள நிலையில், முழு மெட்ரோ ரயிலையும் இயக்கி அதிகாரிகள் முதல்முறையாக இன்று சோதனை நடத்தியுள்ளனர்.
அதிகாரிகள் சோதனை நடத்திய காணொலியை மெட்ரோ ரயில் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
சில நாள்களுக்கு முன்னதாக, பூந்தமல்லி பணிமனையில் இருந்து முல்லைத்தோட்டம் நிலையத்திற்கு ஒரு மோட்டார் டிராலி மூலம் வெற்றிகரமாக சோதனை நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...