
தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அமையும் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருப்பது பாஜக - அதிமுக கூட்டணியை பிரதிபலிப்பதாகத் தெரிகிறது.
அமித் ஷாவின் எக்ஸ் பக்கத்தில் கூறியிருப்பதாவது, ``2026-ல் தமிழகத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசு அமைந்த பின்பு, மது வெள்ளமும், ஊழல் புயலும் முடிவுக்கு வந்துவிடும்’’ என்று பதிவிட்டுள்ளார்.
இதன் மூலம், தமிழகத்தில் அதிமுக - பாஜக கூட்டணி அமைய வாய்ப்புகள் இருப்பதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன.
தமிழகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தில்லி சென்றுள்ள அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை அவரின் இல்லத்தில் இன்று (மார்ச் 25) சந்தித்துப் பேசினார். சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பில், எடப்பாடி பழனிசாமியுடன் மட்டும் 15 நிமிடங்கள் அமித் ஷா தனியாகப் பேசியதாகக் கூறப்படுகிறது.
இபிஎஸ் உடன் கட்சியின் முக்கிய தலைவர்களான தம்பிதுரை, எஸ்.பி. வேலுமணி, கே.பி. முனுசாமி உள்ளிட்டோரும் அமித் ஷாவை சந்தித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.