

சென்னை: உதகையில் நடைபெறும் பல்வேறு அரசு விழாக்களில் பங்கேற்கும் விதமாக, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று காலை சென்னையிலிருந்து உதகை புறப்பட்டார்.
நீலகிரி மாவட்டம் உதகையில் மே 15ஆம் தேதி மலர்க்கண்காட்சியைத் தொடங்கி வைத்துப் பார்வையிட உள்ளார்.
மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க உள்ளார். மக்களுக்கு பட்டாக்களை வழங்கும் நிகழ்ச்சியிலும் பழங்குடியின மக்களுடன் சந்திப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் முதல்வர் பங்கேற்கிறார். மேலும் அரசு நலத்திட்ட உதவிகளையும் வழங்கவிருக்கிறார்.
உதகை மலர்க் கண்காட்சி
நீலகிரி மாவட்டத்துக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இ-பாஸ் கட்டாயம் என்கிற நிலையில், உதகை மலா்க் கண்காட்சி நடைபெறும் நாள்கள் 11 நாள்களாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
மே 15-ஆம் தேதி தொடங்கும் மலா்க் கண்காட்சி மே 25-ஆம் தேதி வரை 11 நாள்கள் நடைபெற உள்ளது.
இதைத் தொடர்ந்து குன்னூா் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி மே 23, 24, 25 ஆகிய தேதிகளில் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.