

திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கரும்பு கொள்முதல் செய்யவில்லை எனக் கூறி சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் விவசாயிகள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் திருவள்ளூர் மாவட்ட விவசாயிகளிடமிருந்து சரியான முறையில் அரசு கொள்முதல் செய்யவில்லை என்று கரும்பு விவசாயிகள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
அதேபோல் ஆந்திரத்தில் இருந்து வரும் கரும்புகளுக்கு அதிக அளவில் முக்கியத்துவம் தருவதாக கூறி சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையின் திருவள்ளூர் ஜேஎன் சாலையில் கரும்பை போட்டு அவர்கள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கூட்டுறவுத் துறை சார்பில் திருவள்ளூர் ஆயில் மில் பகுதியில் நடைபெறும் நிகழ்ச்சியில் சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் சா.மு. நாசர் பங்கேற்பதையறிந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையறிந்த போலீஸார் தடுத்து நிறுத்தி விவசாயிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இப்போராட்டம் காரணமாக சென்னை- திருப்பதி தேசிய நெடுஞ்சாலையில் சிறிது நேரம் வாகனப் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதற்கிடையே நேரில் சந்தித்து முறையிட கரும்பு விவசாயிகள் நுழைவு வாயில் முன்பு காத்திருந்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.