மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

மேட்டூர் அணை நீர்மட்டம் உயர்வு!

மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது தொடர்பாக...

News image
மேட்டூர் அணை
Updated On :12 அக்டோபர் 2025, 3:54 am

இணையதளச் செய்திப் பிரிவு

மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று(அக். 12 )உயர்ந்துள்ளது.

கர்நாடக மாநிலத்தில் காவிரியின் நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் மழையின் காரணமாக கபினி கிருஷ்ணராஜ சாகர் ஆணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

அணைகளில் பாதுகாப்பு கருதி உபரி நீர் காவிரியில் திறக்கப்பட்டு வருகிறது. கர்நாடக அணையில் உபரி நீர் வரத்து காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர் வரத்து அதிகரித்துள்ளது.

இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. நேற்று(அக். 11) காலை மேட்டூர் அணைக்கு விநாடிக்கு 29,540 கன அடி வீதம் வந்து கொண்டிருந்த தண்ணீர், இன்று(அக். 12) காலை விநாடிக்கு 59,123 கன அடியாக அதிகரித்துள்ளது.

கடந்த 2 நாள்களாக நீர் வரத்து அதிகரித்து வருவதால், நேற்று முன்தினம் காலை 111.48 அடியாக இருந்த மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 115.18 அடியாக உயர்ந்துள்ளது.

கடந்த 2 நாள்களில் அணையின் நீர்மட்டம் 3.70 அடி உயர்ந்துள்ளது. அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு நீர் மின் நிலையங்கள் வழியாக விநாடிக்கு 12,000 கன அடி வீதமும் கிழக்கு மேற்கு கால்வாய் பாசனத்திற்கு மேல்மட்ட மதகுகள் வழியாக விநாடிக்கு 500 கன அடி வீதமும் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. அணையில் நீர் இருப்பு 85.99 டிஎம்சியாக உள்ளது.

summary

The water level of Mettur Dam has risen today (Oct. 12).

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.