/

திருச்சியில் வாக்குப்பதிவு தொடங்கியது! ஆர்வத்துடன் மக்கள் வாக்களிப்பு!

திருச்சியில் வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் ஆர்வத்துடன் மக்கள் வாக்களித்து வருகிறார்கள்.

News image

திருச்சியில் வாக்குப்பதிவு - DPS

Updated On :23 ஏப்ரல் 2026, 3:18 am

திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு துவங்கியது. 21.47 லட்சம் வாக்காளர்கள் வாக்களிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 சட்டப்பேரவை தொகுதிகளிலும் பொதுமக்கள் அச்சமின்றி வாக்களிக்கத் தேவையான பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகளை மாவட்ட நிர்வாகம் மற்றும் தேர்தல் ஆணையம் செய்துள்ளனர்.

இன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

திருச்சி மாவட்டத்திலுள்ள 9 தொகுதிகளுக்கும் சேர்த்து சுமார் 3,500-க்கும் மேற்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் மற்றும் விவிபேட் கருவிகள் சுழற்சி முறையில் சரிபார்க்கப்பட்டு அந்தந்த வாக்குச்சாவடிகளுக்கு பலத்த பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட்டன.

வாக்குப்பதிவு சுமூகமாக நடைபெறுவதை உறுதி செய்ய மாவட்டம் முழுவதும் சுமார் 4,500-க்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

111 பதற்றமான வாக்குச்சாவடிகளில், துணை ராணுவப் படையினர் நேரடியாகக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுவார்கள்.

2,775 வாக்குச்சாவடிகளில் பொருத்தப்பட்டுள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திலிருந்து நுண்பார்வையாளர்கள் நேரடியாகக் கண்காணிப்பார்கள்.

திருச்சி மாவட்டத்தில் ஒட்டுமொத்தமாக ஆண்களை விட 64,941 பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர்.

இதுவரை 20,39,698 பேருக்கு பூத் சிலிப் வழங்கப்பட்டுள்ளது. இல்லாதவர்கள் வாக்குச்சாவடி மையத்திலேயே பெற்றுக்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து மையங்களிலும் மாற்றுத்திறனாளிகளுக்காக சரிவுப் பாதை (Ramp) மற்றும் வீல் சேர் வசதி தயார் நிலையில் உள்ளது. வெயிலின் தாக்கத்தைக் குறைக்க வாக்குச்சாவடிகளில் பந்தல் மற்றும் குடிநீர் வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

திருச்சி மாவட்டத்தின் ஒட்டுமொத்த

மொத்த ஆண் வாக்காளர்கள்: 10,40,900

மொத்த பெண் வாக்காளர்கள்: 11,05,841

மூன்றாம் பாலினத்தவர்: 310

திருச்சி மாவட்ட மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 21,47,051 ஆக உள்ளது.

திருச்சி மாவட்டத்தில் மொத்தம் 9 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.

மணப்பாறை

ஸ்ரீரங்கம்

திருச்சிராப்பள்ளி (மேற்கு)

திருச்சிராப்பள்ளி (கிழக்கு)

திருவெறும்பூர்

இலால்குடி

மண்ணச்சநல்லூர்,முசிறி

துறையூர் (தனி)

இந்த 9 தொகுதிகளிலும் சேர்த்து மொத்தம் 3,341 கட்டுப்பாட்டு கருவிகள் , 5,621 வாக்குப்பதிவு கருவிகள் ) மற்றும் 3,619 விவிபேட் கருவிகள் பயன்படுத்தப்பட உள்ளன.

குறிப்பாக.. வாக்களிக்கச் செல்லும் போது வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்த 12 ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை எடுத்துச் செல்லுமாறு மாவட்ட தேர்தல் அதிகாரி கேட்டுக்கொண்டுள்ளார்.

Summary

People are eagerly voting as polling has begun in Trichy.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.