சிவகாசியில் பட்டாசு தொழிற்சாலைகளில் ஆய்வு என்ற பெயரில் தவெக அரசு அச்சுறுத்தல் தருவதாக திமுக எம்.எல்.ஏ. தங்கம் தென்னரசு கண்டனம் தெரிவித்துள்ளார்.
சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலைகளில் அரசு அதிகாரிகள் தொடர்ந்து ஆய்வுக்குச் செல்வதாகவும், அதனால் தொழில்முனைவோர் பலரும் அச்சுறுத்தலுக்கு ஆளாக்கப்படுவதாகவும் முன்னாள் அமைச்சரும் திமுக எம்.எல்.ஏ.வுமான தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
அரசு சார்பில் இந்தத் தொழிலுக்கு ஒத்துழைக்கும் சூழலை வழங்க வேண்டும் என்றும், இதே நிலை தொடர்ந்தால் போராட்டம் நடத்தப்படும் என்றும் அவர் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
தங்கம் தென்னரசு வெளியிட்ட அறிக்கையில், “சிவகாசியில் உரிமம் பெற்ற பட்டாசுத் தொழில்முனைவோருக்கு "ஆய்வு" என்ற பெயரில் அச்சுறுத்தல் தரும் த.வெ.க. அரசை வன்மையாகக் கண்டிக்கின்றோம்.
சட்டப்படி உரிமம் பெற்றுச் செயல்படும் பட்டாசுத் தொழிற்சாலைகள் மற்றும் விற்பனையாளர்களைத் தேவையற்ற ஆய்வுகள் மூலம் முடக்குவதை ஏற்றுக்கொள்ள முடியாது.
தீபாவளி நேரத்தில் இத்தகைய கெடுபிடிகள் லட்சக்கணக்கான தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தையும், சிவகாசியின் பொருளாதாரத்தையும் பாதிக்கும். அரசின் இந்த நடவடிக்கையை உடனடியாக நிறுத்தி, தொழிலுக்கு ஒத்துழைக்கும் சூழலை உருவாக்க வேண்டும்.
இல்லையெனில், பட்டாசுத் தொழிலாளர்களின் உரிமைக்காக, மாண்புமிகு கழகத் தலைவர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் அனுமதியோடு ஜனநாயக வழியில் மாபெரும் போராட்டம் முன்னெடுக்கப்படும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Summary
Thangam Thennarasu condemns TVK for intimidation tactics disguised as inspections at firecracker factories
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
குஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!

தவெக ஆட்சியில் கடன் ரூ. 20 லட்சம் கோடியாக உயரும்! தங்கம் தென்னரசு சவால்!

மக்களிடம் இருந்து தப்பிக்கும் தவெக! வெள்ளை அறிக்கை குறித்து தங்கம் தென்னரசு!

இயலாமையை மறைக்க வெள்ளை அறிக்கை நாடகம்: தங்கம் தென்னரசு
விடியோக்கள்

விஜய் அமைச்சரவையில் விரைவில் மாற்றம் ? | CM Vijay | TVK Ministers | Jagadeswaran | TVK Government




