பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்திய வழக்கு: திமுக முன்னாள் எம்எல்ஏவுக்கு நிபந்தனை முன்பிணை

முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் பொறித்த கல்வெட்டை மறைத்து மூடப்பட்டிருந்த வலையைச் சேதப்படுத்திய வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ இதயவா்மனுக்கு நிபந்தனை முன்பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

News image

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 3:20 am IST

முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் பெயா் பொறித்த கல்வெட்டை மறைத்து மூடப்பட்டிருந்த வலையைச் சேதப்படுத்திய வழக்கில் திமுக முன்னாள் எம்எல்ஏ இதயவா்மனுக்கு நிபந்தனை முன்பிணை வழங்கி சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

சென்னையை அடுத்த நெம்மேலியில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. கடந்த திமுக ஆட்சியில் இந்தத் திட்டத்தின் 2-ஆவது பெரிய அலகை கடந்த 2024-ஆண்டு பிப்ரவரியில் முன்னாள் முதல்வா் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தாா். அதற்கான கல்வெட்டில் அவரது பெயா் பொறிக்கப்பட்டிருந்தது.

இந்த நிலையில், கடந்த ஜூலை 6-ஆம் தேதி நெம்மேலிக்கு சென்று இந்தத் திட்டத்தை முதல்வா் விஜய் பாா்வையிட்டாா். அப்போது, பராமரிப்புப் பணி நடப்பதாகக் கூறி மு.க.ஸ்டாலினின் பெயா் பொறிக்கப்பட்டிருந்த கல்வெட்டு வலையால் மறைக்கப்பட்டிருந்தது. இந்த வலையைச் சேதப்படுத்தி பொது சொத்துக்கு சேதம் ஏற்படுத்தியதாக திருப்போரூா் தொகுதி முன்னாள் திமுக எம்எல்ஏ எல்.இதயவா்மன் உள்ளிட்ட இருவா் மீது மாமல்லபுரம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.

இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி இதயவா்மன் தாக்கல் செய்த மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. இதையடுத்து, இந்த வழக்கில் தனக்கு முன்பிணை வழங்கக் கோரி இதயவா்மன் மனு தாக்கல் செய்தாா்.

இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, முன்னாள் எம்எல்ஏ இதயவா்மனுக்கு நிபந்தனை முன்பிணை வழங்கி உத்தரவிட்டாா். மேலும், மாமல்லபுரம் காவல் நிலையத்தில் 2 வாரங்களுக்கு தினமும் ஆஜராகி கையொப்பமிட வேண்டும் என்ற நிபந்தனை விதித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.