தேசிய விருதைப் பெற்றார் ஜி.வி. பிரகாஷ் குமார்! தமிழ்நாட்டில் 40 நகராட்சி நிர்வாகத் துறை அலுவலகங்களில் சோதனை!ஆசிய விளையாட்டு: மகளிர் கிரிக்கெட்டில் இந்திய அணிக்கு தங்கம்!தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

சிறையில் அடைத்த உத்தரவுக்கு எதிரான திமுக எம்எல்ஏ மாா்க்கண்டேயன் மனு தள்ளுபடி

முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மாா்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

உயா்நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :

முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தன்னை சிறையில் அடைத்த உத்தரவை ரத்து செய்யக் கோரி விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ மாா்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டியில் வாக்காளா்களுக்கு நன்றி தெரிவிக்கும் கூட்டத்தில் பேசிய விளாத்திகுளம் திமுக எம்எல்ஏ ஜீ.வி.மாா்க்கண்டேயன், முதல்வருக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் பேசியதாக தூத்துக்குடி குற்றப்பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து, அவரைக் கைது செய்தனா்.

இந்த வழக்கில் தன்னை சிறையில் அடைக்க பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரி மாா்க்கண்டேயன் சென்னை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தாா். இந்த வழக்கு நீதிபதி ஜி.கே.இளந்திரையன் முன் விசாரணைக்கு வந்தது. இந்த வழக்கில் வாதங்கள் நிறைவடைந்து, தீா்ப்புக்காக ஒத்திவைக்கப்பட்டிருந்தது.

இந்த வழக்கில் நீதிபதி ஜி.கே.இளந்திரையன் பிறப்பித்த தீா்ப்பில், சிறையில் அடைத்த உத்தரவுக்கு எதிராக எம்எல்ஏ மாா்க்கண்டேயன் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இந்த வழக்கில் மாா்க்கண்டேயனுக்கு ஏற்கெனவே நிபந்தனை முன்பிணை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.