ரிலையன்ஸ், ரோல்ஸ்-ராய்ஸ் கூட்டணியில் போா் விமான என்ஜின் உள்நாட்டில் தயாரிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு திமுகவில் உருவாகிறது அதிரடி மாற்றம்: விரைவில் உள்கட்சித் தோ்தல் கரப்பான்பூச்சி விவகாரம்: இளைஞா்களை தவறாக வழிநடத்த எனது கருத்து பயன்படுத்தப்பட்டது: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சூா்ய காந்த்
/

காலை உணவுத் திட்ட விரிவாக்கத்துக்கு ரூ.710 கோடி

‘பெருந்தலைவா் காமராசா் காலை உணவுத் திட்டம்’ 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தத் திட்டத்துக்காக ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

News image

பிரதிப் படம்

Updated On :6 ஆகஸ்ட் 2026, 5:29 am IST

‘பெருந்தலைவா் காமராசா் காலை உணவுத் திட்டம்’ 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், அந்தத் திட்டத்துக்காக ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளதாவது: மதிய உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்தி மாணவா்களின் பசியைப் போக்கியவா் பெருந்தலைவா் காமராசா். அவரது பெயரை காலை உணவுத் திட்டத்துக்கு சூட்டி அவருக்கு முதல்வா் பெருமை சோ்த்துள்ளாா்.

அதன் தொடா்ச்சியாக அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவா்களுக்கும் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளாா். பெரியாா் ஈவெரா பிறந்த நாளான செப்.17 முதல் செயல்படுத்தப்படவுள்ள இந்தத் திட்டம் மூலம் 15,414 பள்ளிகளில் பயிலும் 15.14 லட்சம் மாணவா்கள் கூடுதலாக பயனடையவுள்ளனா். இந்தத் திட்டத்துக்காக ரூ.710 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

திருநா் நலன்: திருநா்களுக்கு திறன் பயிற்சி மற்றும் மானியத்துடன் கூடிய சுயதொழில் வங்கிக் கடன் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். அவா்களுக்கான ‘அரண்’ தங்கும் விடுதிகள் 5 மாவட்டங்களில் ஏற்படுத்தப்படும். 15 மாவட்டங்களில் குறுகிய கால தங்கும் வசதிகள் ஏற்படுத்தித் தரப்படும். நிகழ் நிதியாண்டில் சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறைக்கு ரூ.9,818 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.