அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, திருவள்ளூர் உள்பட 22 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சுமார் 5.8 கிமீ முதல் 7.6 கிமீ உயரம் வரை தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகள் முதல் லட்சத்தீவு பகுதிகள் வரை தென் தமிழகம் மற்றும் கேரளா வழியாக ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
வட தமிழக கடலோரப்பகுதிகளில் கீழ்மட்ட வளிமண்டலத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது.
இதன் காரணமாக இன்று(ஆக. 6) ராணிப்பேட்டை, திருவள்ளூர், நீலகிரி மாவட்டங்கள் மற்றும் கோயம்புத்தூர், தேனி, திருநெல்வேலி, கன்னியாகுமரி மாவட்டங்களின் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய கன மழை பெய்யக்கூடும்.
இதர மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர், சேலம், ஈரோடு, திருச்சிராப்பள்ளி, கரூர், மதுரை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
ஏனைய தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் (மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில்) கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அடுத்த 2 மணி நேரத்துக்கு(இரவு 7 மணி வரை) சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.
காஞ்சிபுரம், திருச்சிராப்பள்ளி, கரூர், நாமக்கல், மதுரை, திண்டுக்கல், சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி, தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, விருதுநகர், திருப்பூர், நீலகிரி, கோவை மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கிருஷ்ணகிரி, ஈரோடு, திருப்பத்தூர் மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
The Chennai Regional Meteorological Centre has stated that there is a possibility of rain in 22 districts, including Chennai and Tiruvallur, over the next two hours.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை!

அடுத்த 3 மணி நேரத்துக்கு சென்னை உள்பட 19 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 19 மாவட்டங்களில் மழை!

அடுத்த 2 மணி நேரத்துக்கு சென்னை, 11 மாவட்டங்களில் மழை!
விடியோக்கள்

ஈரானுக்கு டிரம்ப் விடுக்கும் எச்சரிக்கை! | Donald Trump | Iran | Hormuz Strait |




