முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளர் என்று சொல்வது தொண்டர்களின் ஆர்வமிகுதி: திருமாவளவன்கரப்பான்பூச்சி கட்சியை ராஜிநாமா கட்சி என மாற்றியாக வேண்டும்: மத்திய அமைச்சர்தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு எம்பிபிஎஸ் இடங்கள்! பெற்றோருக்கு காத்திருந்த அதிர்ச்சி!2 நாள்களில் 9 கொலைகள்! இனியும் மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருக்காமல்... உதயநிதி விமர்சனம்எதற்காகக் காத்திருக்கிறது ஆதம்பாக்கம் பறக்கும் ரயில் நிலையம்? மக்கள் வேதனைபோக்சோ வீரமணி வழக்கு! முதல்வர் விஜய், அமைச்சர்களை விசாரிக்க கோரி திமுக மனு!ஆபத்தில் ஜனநாயகம்; முழு வலிமையுடன் பாதுகாப்போம்! ராகுல் காந்திஞானேஷ் குமாரை பதவி நீக்க மனு: அடுத்த வாரம் விசாரணை! தலைமை நீதிபதி ஒப்புதல்!தனியார் பேருந்துகள் வேலைநிறுத்தம் ஒத்திவைப்பு!மினி பேருந்துகள் நாளை வழக்கம்போல் இயங்கும்!

சூப்பர் மாற்றம் இதுதானா? பள்ளியில் மது அருந்தும் மாணவிகள்! வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி

சூப்பர் மாற்றம் இதுதானா? என்று கேட்டு பள்ளியில் மது அருந்தும் மாணவிகள் குறித்து வானதி ஸ்ரீனிவாசன் கேள்வி எழுப்பியிருக்கிறார்.

Vanathi Srinivasan

வானதி சீனிவாசன் - ENS

Published On :

பள்ளி வளாகத்திலேயே சீருடையில் மாணவிகள் சிலர் மது அருந்தும் விடியோவை இணைத்து, மதி வளர்க்கும் கூடங்களா? இல்லை மதுபானக்கூடங்களா? என்று பதிவிட்டு, பாஜக மூத்த தலைவர் வாசனதி ஸ்ரீனிவாசன் ஒரு பதிவை வெளியிட்டுள்ளார்.

அவர் வெளியிட்டிருக்கும் பதிவில், கன்னியாகுமரி மாவட்டம் தக்கலை அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவிகள் இருவர் வகுப்பறை முன்பு மது அருந்தியாதாக் கூறப்படும் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது.

கடந்த மாதமே இச்சம்பவம் நடைபெற்றதாகக் கூறப்படும் நிலையில் தற்போது வீடியோ வெளியாகி பெற்றோர்களிடத்திலும் கல்வியாளர்களிடமும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி இருக்கிறது.

இதேபோல் கடந்த சில தினங்களுக்கு முன்னரும் மதுரை விரகனூர் அரசு பள்ளி மாணவர் ஒருவர் சக மாணவரை ஆசிரியர்கள் முன்னிலையில் தாக்குவதும், தரக்குறைவாக பேசியதுமான காட்சிகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் இந்த சம்பவமும் கல்வி துறையின் ஒட்டுமொத்த மாண்பையே சீர்குலைத்துள்ளது.

மாற்றம் தருவோம்.. மாற்றம் தருவோம் என்று மேடைக்கு மேடை முழங்கி அரியணை ஏறிய தவெக ஆட்சியின் சூப்பரான மாற்றம் இதுதானா பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் அவர்களே..?

மாணவர்கள் வகுப்பறையில் போதைப்பொருட்கள் பயன்படுத்துவதும், ஆயுதங்ளைக் கொண்டுவருவதும், ஒழுங்கீனமாக நடந்து கொள்வதும் பெருகி வருவது கவலை அளிக்கும் செயல்.

எத்தனையோ அரசுப் பள்ளி மாணவர்கள் பல துறைகளில் சாதித்து வரும் வேளையில் இது போன்ற விரும்பத் தகாத சம்பவங்கள் தொடர்ந்து நடைபெறுவது ஒட்டுமொத்த அரசு பள்ளிகளின் பெயரையே அவமதிக்கும் வகையில் அமைந்திருக்கிறது.

தவெக ஆட்சியில் பள்ளிகளில் என்றைக்கு ரீல்ஸ் மோகங்களும், சினிமா பாடல்களும் வளர ஆரம்பித்ததோ அன்றே அறநெறி வகுப்புகளும், கடும் கட்டுப்பாடுகளும் காற்றில் பறந்து விட்டது என்பது தான் உண்மை.

பள்ளிகளில் மாணவர்களுக்கு முதலில் போதிக்க வேண்டியது ஒழுக்கமும், கீழ்படிதலும் தான் என்பதை நினைவில் நிறுத்தி இனி இது போன்ற செயல்கள் நடைபெறாதவாறு ஆசிரியர்கள் மாணவர்களின் நல்வழிப்படுத்துமாறு வலியுறுத்துகிறேன் என்று பதிவிட்டிருக்கிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.