
ரூ.164.64 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள காவலர்கள் குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர் விஜய்!
ரூ.164.64 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள காவலர்கள் குடியிருப்புகளை முதல்வர் விஜய் திறந்து வைத்தது தொடர்பாக...

ரூ.164.64 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள காவலர்கள் குடியிருப்புகளை காணொளி மூலம் திறந்து வைத்த முதல்வர் விஜய் - டிஎன்எஸ்
காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் ரூ.164.64 கோடி செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை வியாழக்கிழமை முதல்வர் ச. ஜோசப் விஜய் காணொளி மூலம் திறந்து வைத்தார்.
முதல்வர் ச. ஜோசப் விஜய் இன்று (ஆக 27) தலைமைச் செயலகத்தில், காவல் துறை சார்பில் ரூ.127 கோடியே 76 லட்சம் செலவிலும், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை சார்பில் ரூ.36 கோடியே 88 லட்சம் செலவில் என மொத்தம் ரூ.164 கோடியே 64 லட்சம் செலவில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களைத் திறந்து வைத்தார்.
மாநிலத்தின் அமைதியைப் பேணிப் பாதுகாத்து, சட்டம் ஒழுங்கைப் பராமரிக்கும் முக்கியப் பணிகளை ஆற்றிவரும் காவல் துறையின் பணிகள் சிறக்கவும், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறையின் செயல்திறன் மேம்படவும், அத்துறைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்திட பல்வேறு திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.
காவல்துறை சார்பில் திறந்து வைக்கப்பட்ட புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் விவரங்கள்:
செங்கல்பட்டு மாவட்டம், பெரும்பாக்கத்தில் ரூ.121 கோடியே 85 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள 400 காவலர் மற்றும் தலைமைக் காவலர் குடியிருப்புகள்; சென்னை மாவட்டம், துறைமுகத்தில் ரூ. 2 கோடியே 91 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் நிலையம்;
சென்னை மாவட்டம், ஆவடி, தமிழ்நாடு சிறப்புக் காவல்படை 5-ஆம் அணி வளாகத்தில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் பல்பொருள் அங்காடி மற்றும் புனித தோமையார் மலை ஆயுதப்படை வளாகத்தில் ரூ. 1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் பல்பொருள் அங்காடி;
காஞ்சிபுரம் மாவட்டம், காஞ்சிபுரம் ஆயுதப்படை வளாகத்தில் ரூ.1 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள காவலர் பல்பொருள் அங்காடி என மொத்தம் ரூ.127 கோடியே 76 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள காவல் துறைக் கட்டடங்களை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சார்பில் திறந்து வைக்கப்பட்ட புதிதாகக் கட்டப்பட்டுள்ள கட்டடங்களின் விவரங்கள்:
சேலம் மாவட்டம் – செவ்வாய்பேட்டையில் 6 கோடியே 8 இலட்சம் ரூபாய் செலவிலும், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – சமயபுரத்தில் ரூ.3 கோடியே 91 லட்சம் செலவிலும், நாமக்கல் மாவட்டம் – வெப்படையில் ரூ.2 கோடியே 48 லட்சம் செலவிலும், பெரம்பலூர் மாவட்டம் – பெரம்பலூரில் ரூ.4 கோடியே 33 லட்சம் செலவிலும், மதுரை மாவட்டம் –தே. கல்லுப்பட்டியில் ரூ.2 கோடியே 38 லட்சம் செலவிலும் மற்றும் வாடிப்பட்டியில் ரூ.2 கோடியே 21 லட்சம் செலவிலும், சிவகங்கை மாவட்டம் – சிங்கம்புணரியில் ரூ.2 கோடியே 46 லட்சம் செலவிலும் கட்டப்பட்டுள்ள 7 தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் நிலையங்கள்; கோயம்புத்தூர் மாவட்டம் – பீளமேட்டில் ரூ.6 கோடியே 33 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான 15 குடியிருப்புகள் மற்றும் நாமக்கல் மாவட்டம் – திருச்செங்கோட்டில் ரூ. 4 கோடியே 34 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான 14 குடியிருப்புகள்; கோயம்புத்தூர் மாவட்டம் – மேட்டுப்பாளையத்தில் ரூ.2 கோடியே 36 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக்கான படைக் குடியிருப்பு என மொத்தம் ரூ. 36 கோடியே 88 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறைக் கட்டடங்களை முதல்வர் விஜய் திறந்து வைத்தார்.
இந்நிகழ்ச்சியில், தலைமைச் செயலாளர் முனைவர் மு. சாய்குமார், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் டாக்டர் க. மணிவாசன், காவல்துறை தலைமை இயக்குநர் மகேஷ் குமார் அகர்வால், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை இயக்குநர் ஜி. வெங்கடராமன், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் வினித் தேவ் வான்கேடே, சென்னை மாநகர காவல் ஆணையர் முனைவர் அ. அமல்ராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Summary
Chief Minister Vijay inaugurated the newly constructed police housing quarters,built at a cost of Rs 164.64 crore!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





