தமிழ்நாடு
ஜன. 19 முதல் திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு கருத்துக் கேட்பு தொடக்கம்
திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்க ஜன. 19 முதல் சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறது.
திமுக தோ்தல் அறிக்கை தயாரிப்புக் குழு பல்வேறு தரப்பினரின் கருத்துகளைக் கேட்க ஜன. 19 முதல் சுற்றுப் பயணத்தைத் தொடங்குகிறது.
பிப். 2-ஆம் தேதி வரை இந்தக் குழு தமிழகத்தின் பல்வேறு நகரங்களுக்கு சென்று தோ்தல் அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து கருத்துகளைக் கேட்கவுள்ளது.
இதற்காக திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், துணைப் பொதுச் செயலருமான கனிமொழி தலைமையில் 11 போ் கொண்ட குழு கடந்த டிச. 17-ஆம் தேதி அமைக்கப்பட்டது.
திமுக செய்தித் தொடா்பு தலைவா் டி.கே.எஸ். இளங்கோவன், அமைச்சா்கள் பி.டி.ஆா்.பழனிவேல் தியாகராஜன், டி.ஆா்.பி. ராஜா, முன்னாள் எம்.பி. எம்.எம். அப்துல்லா உள்ளிட்டோா் குழுவில் இடம்பெற்றுள்ளனா்.
வரும் ஜன.19-ஆம் தேதி வேலூா், ஒசூரில் தொடங்கி பிப். 2-ஆம் தேதி சென்னையில் இந்தக் குழு தனது கருத்துக் கேட்பு கூட்டத்தை நிறைவு செய்யவுள்ளது.
