மாட்டுப் பொங்கல்! சேலத்தில் உற்சாகக் கொண்டாட்டம்!!

சேலத்தில் மாட்டுப் பொங்கல் உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
Salem
மாட்டுப் பொங்கல் விழாDPS
Updated on
1 min read

மாட்டுப் பொங்கல் விழா: உணவளிக்கும் உழவனுக்கு உற்ற துணையாக இருக்கும் மாடுகளுக்கு நன்றி செலுத்தும் வகையில் சேலத்தில் மாடுகளை குளிப்பாட்டி, கொம்புகளுக்கு வண்ணம் பூசி, பொங்கல் வைத்து, மாடுகளுக்கு ஊட்டிவிட்டு மாட்டுப் பொங்கல் விழா வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாட்டப்பட்டு வருகிறது.

தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் திருவிழா தமிழகம் முழுவதும் வழக்கமான உற்சாகத்துடன் கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று சூரியனுக்கு நன்றி செலுத்தும் வகையில் அனைவரும் தங்கள் வீட்டின் முன்பு பொங்கல் படையலிட்டு சூரிய பகவானை வணங்கினர். அதனை தொடர்ந்து 2ம் நாளான இன்று மாட்டு பொங்கல் விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது

உழவுக்கு உயிரூட்டும் விதமாகவும், விவசாயத்திற்கு பயன்படும் கால்நடைகளுக்கு நன்றி சொல்லும் விதமாகவும் இந்த மாட்டுப் பொங்கல் திருவிழா தமிழகம் முழுவதும் சீரும் சிறப்புமாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக, சேலம் குரும்பப்பட்டி பகுதியில் உள்ள விவசாயிகள் அதிகாலை எழுந்து தங்களின் உயிர்த் தோழானாக இருந்து உழைத்த கால்நடைகளை போற்றி நன்றி கூறும் வகையில், மாடுகளை குளிப்பாட்டி, பின்னர், மாடுகளின் கொம்புகளை சீவி, வண்ணங்கள் பூசி, கூரான கொம்பில் குஞ்சம் அல்லது சலங்கையை கட்டிவிட்டு அழகு சேர்த்தனர்.

அதன் பின்னர், பொங்கல் வைத்து வழிபாடு நடத்தி மாடுகளுக்கு பொங்கல், கரும்பு, வாழைப்பழம் ஆகியவற்றை ஊட்டி பொங்கல் பண்டிகையை உற்சாகமாகக் கொண்டாடினர்.

இதேபோல் சேலம் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மாட்டுப்பொங்கல் விழா களைக்கட்டத் தொடங்கியுள்ளது. எங்கு பார்த்தாலும் விவசாயிகள் தங்கள் விளைநிலங்களில் பொங்கல் வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com