தீய சக்தியின் ஆட்சியில் இருள் சூழ்ந்த தமிழகத்தை மீட்டெடுத்த எம்.ஜி.ஆரை போற்றுவோம்: எடப்பாடி பழனிசாமி!

தீய சக்தியின் ஆட்சியிலே இருள் சூழ்ந்த தமிழகத்தை மீட்டெடுத்த எம்.ஜி.ஆரை போற்றுவோம் என எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி.
எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி.
எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி.(கோப்புப்படம்)
Updated on
1 min read

தீய சக்தியின் ஆட்சியிலே இருள் சூழ்ந்த தமிழகத்தை மீட்டெடுத்த எம்.ஜி.ஆரை போற்றுவோம் என முன்னாள் முதல்வரும், அதிமுக பொதுச் செயலருமான எடப்பாடி பழனிசாமி புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

முன்னாள் முதல்வர் எம்.ஜி. ராமச்சந்திரனின் பிறந்த நாள் இன்று கொண்டாப்படுகிறது. அதையொட்டி அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் பலரும் எம்.ஜி.ஆர். புகைப்படங்கள், உருவச்சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலர் எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றையும் வெளியிட்டுள்ளார்.

அந்தப் பதிவில், “ 'பொன்மனச் செம்மல்' புரட்சித் தலைவர் 'பாரத ரத்னா' டாக்டர் எம்.ஜி.ஆர். அவர்களின் 109-ஆவது பிறந்த நாள், எங்கள் தங்கத்தின் பிறந்த நாள்.

அஇஅதிமுக எனும் மாபெரும் மக்கள் பேரியக்கத்தை உருவாக்கிய மக்கள் திலகத்தின் பிறந்த நாள். தீய சக்தியின் ஆட்சியிலே இருள் சூழ்ந்திருந்த தமிழகத்தை மீட்டெடுத்து ஒளியேற்றி, குடும்ப ஆட்சிக்கும், கொடுங்கோல் ஆட்சிக்கும் முடிவு கட்டி, மக்கள் ஆட்சியை உருவாக்கியதோடு, சட்டப்பேரவைத் தேர்தலில் தொடர் வெற்றியைப் பெற்று கழகத்திற்கு பெருமை சேர்த்திட்ட மகத்தான தலைவராம் நம் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆரை அவர்தம் பிறந்தநாளில் போற்றி வணங்கி, தமிழ் மொழிக்காக, தமிழ் இனத்திற்காக, தமிழ் நாட்டிற்காக, தன்னையே அர்ப்பணித்து, தமிழர்களை தலைநிமிர வைப்பதற்கும்; அநீதியை அழித்து, நீதியை நிலைநாட்டுவதற்கும் அவர் ஏந்திய ஆயுதமான அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு, நம் அரசியல் எதிரிகள் எத்தனை திட்டங்கள் தீட்டினாலும், அவை அனைத்தையும் தவிடுபொடியாக்கி, தமிழக மக்களுக்கு நல்லாட்சியை வழங்குகின்ற கடமையும், பொறுப்பும், நம் அனைவர் முன்பும் இருக்கின்றது.

அந்தப் பயணத்தில் கழக உடன்பிறப்புகள் ஒவ்வொருவருடைய உழைப்பும், ஆர்வமும் மிகவும் இன்றியமையாததாகும். உங்கள் முயற்சிகள் அனைத்திற்கும் என்றென்றும் நான் உறுதுணையாக இருப்பேன். நாம் அனைவரும் ஒன்றுசேர்ந்து அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை வெற்றிப் பாதையில் அழைத்துச் செல்வோம்; வெற்றிவாகை சூடுவோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.

எம்.ஜி.ஆர். உருவப்படத்துக்கு மரியாதை செலுத்திய எடப்பாடி பழனிசாமி.
17.1.1976: “பதவிக்காலம் முடிவதற்குள் தி.மு.க. அரசு ராஜினாமா செய்யும் உத்தேசமில்லை” - முதன்மந்திரி பேட்டி
Summary

Former Chief Minister and AIADMK General Secretary Edappadi Palaniswami has paid tribute, saying, "Let us praise MGR, who rescued Tamil Nadu from the darkness under the rule of evil forces."

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com