தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்போராட்டத்தில் பங்கேற்றால் நடவடிக்கை! மாணவர்களுக்கு ஜேஎன்யு, தில்லி பல்கலை. எச்சரிக்கை!ஜன நாயகன் படம் பார்த்தால் மூளைக்கு சுறுசுறுப்பு ஏற்படும்! ஜேசிடி பிரபாகர்ஒரு மாத தலைமறைவுக்கு பின் செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை!ஜெ.பி. நட்டாவுடன் சிஜேபி நிர்வாகிகள் இன்று பேச்சுவார்த்தை!சோனம் சாருக்கு நன்றி! அமைதியான போராட்டம் தொடரும்! அபிஜீத் தீப்கேதங்கம், வெள்ளி விலை அதிரடியாக சரிவு! இன்றைய நிலவரம் (ஜூலை 24)
/

தமிழ்நாடு காவல்துறை துறை நிர்வாகத் திறனை இழந்து விட்டதோ? - மு.வீரபாண்டியன்

தமிழ்நாடு காவல்துறை துறை நிர்வாகத் திறனை இழந்து விட்டதோ? என சந்தேகத்தை ஏற்படுத்துவதாக மு.வீரபாண்டியன் கூறியிருப்பது...

News image

தமிழ்நாடு காவல்துறை துறை நிர்வாகத் திறனை இழந்து விட்டதோ? - கோப்புப்படம்

Updated On :24 ஜூலை 2026, 2:51 pm IST

காவல் மரணங்கள் தொடர்வது கவலையளிப்பதாகவும், அது, தமிழ்நாடு காவல்துறை தனது துறையை வழிநடத்தும் நிர்வாகத் திறனை இழந்து விட்டதோ? என்ற ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது என இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.

அரசு அனுமதிக்கக் கூடாது

காவல் மரணங்கள் தொடர்வதை அரசு அனுமதிக்கக் கூடாது. சில வாரங்களுக்கு முன்பு கன்னியாகுமரி மாவட்டத்தில் மாற்றுத் திறனாளி சபரிவர்மன், காவல் துறையினரால் அடித்துக் கொல்லப்பட்ட அதிர்வலைகள் இன்னும் அடங்கவில்லை. அதற்குள் தூத்துக்குடி காவல்துறையினர் கடந்த 17 ஆம் தேதி விசாரணைக்கு அழைத்துச் சென்ற அருணாசலம் என்பவரின் காவல் மரணம் நிகழ்ந்திருப்பதை இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது.

நிர்வாகத் திறனை இழந்து விட்டதோ?

காவல்துறையினர் விசாரணைக்கு ஒருவரை அழைத்துச் செல்ல வேண்டும் எனில், என்னென்ன விதிமுறைகள் கடைப்பிடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றங்களும் பல தீர்ப்புகளில் வலியுறுத்தியுள்ளன. பிஎன்எஸ்எஸ் சட்டத்தின் சில பிரிவுகளும் விசாரணை நடைமுறை குறித்து வழிகாட்டியுள்ளன. இவைகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல், காவல் துறையினர் அதிகார அத்துமீறலில் தொடர்ந்து ஈடுபடுவதும், இதில் மனித உயிர்கள் பலியாவதுமான கொடூர சம்பவங்கள் நிகழ்ந்து வருவதும் கவலையளிக்கிறது. அது, தமிழ்நாடு காவல்துறை தனது துறையை வழிநடத்தும் நிர்வாகத் திறனை இழந்து விட்டதோ? என்ற ஆழ்ந்த சந்தேகத்தை ஏற்படுத்துகிறது.

காவல்துறைக்கு எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை

சாத்தான்குளம் காவல் துறையினரால் தந்தையும், மகனும் கொல்லப்பட்ட வழக்கின் தீர்ப்பு காவல்துறையின் மனப் போக்கிலும், நடைமுறையிலும் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை என்பதையே கன்னியாகுமரி, தூத்துக்குடி சம்பவங்கள் வெளிப்படுத்துகின்றன.

சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும்

விசாரணைக்கு அழைத்துச் செல்வோர் உயிருக்கும், கண்ணியத்திற்கும் பாதுகாப்பு அளிக்கும் வகையில் காவல்துறையினருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்க வேண்டும்.

தவறு செய்த காவல் துறையினர் மீது மேலும் கடுமையான நடவடிக்கை எடுத்து, தண்டனையும் விதிக்க தக்க விதிமுறைகள் உருவாக்க வேண்டும்.

காவல் மரணங்களை முற்றிலுமாக தடுக்கும் வகையில் காவல்துறை நிர்வாகத்தை சீரமைக்க முதல்வர் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்தியிருப்பதுடன், தூத்துக்குடி காவல் மரணத்தில் பலியான அருணாசலம் குடும்பத்திற்கு இழப்பீடும், நீதியும் வழங்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Summary

Has the Tamil Nadu Police lost its administrative competence? - M. Veerapandian

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.