FOLLOW US

ON GOOGLE DISCOVER

‘வந்தே மாதரம்’ பாடலை அவமதித்தால் 3 ஆண்டுகள் சிறைபுதுச்சேரி கடற்கரை சாலை மூடல் டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 18 காசுகள் உயர்ந்து ரூ. 96.55 ஆக நிறைவு!5வது நாளாக சரிவுடன் நிறைவடைந்த சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி!மன்னார்குடி எம்எல்ஏ காமராஜை தகுதிநீக்கம் செய்யக் கோரி அமமுக மனு வினாத்தாள் கசிவைத் தடுக்க சட்டத் திருத்த மசோதா! மத்திய அமைச்சரவை ஒப்புதல்!சர்வதேச செஸ் கூட்டமைப்பின் தலைவராக விஸ்வநாதன் ஆனந்த் தேர்வு!தர்மேந்திர பிரதானை ஏன் விலக்க மறுக்கிறது மோடி அரசு? வெளித்தெரியாத காரணங்கள் என்னென்ன?மத்திய அமைச்சரவையிலிருந்து தர்மேந்திர பிரதான் நீக்கப்படாததற்கு காரணம் என்ன? நீட் போராட்டத்தை திசை திருப்ப.. நீட் சாதனையாளர்களைக் கொண்டாடுமாறு கூறும் மத்திய அரசு! ஆக. 3 -ல் கர்நாடகம் செல்கிறார் முதல்வர் விஜய்! அமைச்சர் தகவல்
/

ஒப்பந்தப் பணி அனுமதிகள் கிடைப்பதில் இனி தாமதமிருக்காது: அமைச்சர் ராஜ்குமார்

ஒப்பந்தப் பணி அனுமதிகள் கிடைப்பதில் இனி தாமதமிருக்காது என தமிழக அமைச்சர் ராஜ்குமார் தெரிவித்துள்ளார்.

News image

தமிழக சட்டப்பேரவை - IANS

Updated On :24 ஜூலை 2026, 5:39 pm IST

அரசு ஒப்பந்தப் பணிகளில் அனுமதிகள் கிடைப்பதில் இனி தாமதமிருக்காது, விரைவாக நடைபெறும் என்று தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ராஜ்குமார் கூறினார்.

வேலூர் மாவட்டம் காட்பாடியில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் உள்ளடங்கிய கட்டுமான பொறியாளர்கள் கூட்டமைப்பு மற்றும் கருத்தரங்கு நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழக வீட்டு வசதி மற்றும் நகர்புற மேம்பாட்டு துறை அமைச்சர் ராஜ்குமார் கலந்துகொண்டு பேசினார்.

நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் ராஜ்குமார், கடந்த வாரம் முதல்வர் விஜய் தலைமையில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில், முதல்வர் விஜய் சொன்னார் ஏம்பா நம்ம நாடு சிங்கப்பூர் போல மாத்தணும் எனக்கு ஆசையா இருக்கு. அது எப்படி பண்ணனும்னு பார்க்க சொன்னாரு. நம்ம முதலமைச்சர் நம்ம நாட்டையே சிங்கப்பூர் போல மாத்தணும்னு, எப்படிக் கொண்டு வரணும்னு திட்டத்தை என்னிடம் அதுவும் அன்புக் கட்டளையாக சொல்லியிருக்கிறார்.

அரசு ஒப்பந்த வேலைகளில் நானே பல வேலைகளை எடுத்துக்கொண்டு பல அலுவலகங்களில் படிகளை ஏறி இறங்கி மிகவும் சிரமப்பட்டு இருக்கிறேன். அந்த சிரமத்தை அனுபவித்தவன் என்பதனாலேயே அதன் அடிப்படையிலேயே யார் கோப்புகள் கொடுத்தாலும் உடனடியாக ஒரு மாதத்திற்குள் அதை முடித்துக் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் அனுமதியோடு உத்தரவிட்டிருக்கின்றேன்.

ஒரு கிராம நிர்வாக அதிகாரி அளவில் ஆரம்பிக்கின்ற இந்த விஷயம் ஒவ்வொரு படிப்படியாக சென்று இந்த அப்ரூவல் பெறுவதற்கு வருகின்ற கஷ்டம் ஏன் இந்த வேலையை எடுத்தோமோ என்கின்ற ஒரு சூழ்நிலை ஏற்பட்டு விடுகிறது. மேலும் அளைந்து திரிந்து ஏதோ கிடைத்தால் போதும், வாங்கிய கடனுக்கு வட்டி கட்டுகின்ற அளவுக்கு வந்தால் போதும் என்கின்ற நிலைமைக்கு மாறிவிடுகிறது. இதை போன்ற கஷ்டம் அனுபவத்தவர்களில் நானும் ஒருவன். அதனால்தான் கடவுளாக பார்த்து முதல்வர் இந்த துறையை எனக்குக் கொடுத்திருக்கிறார். ஒவ்வொரு அலுவலராக சென்று சந்தித்து சிஎம்டிஏ அனுமதி பெற்று கடைசியில் அமைச்சரின் மேஜைக்கு வரும். ஏனென்றால் பார்ட்டி ஃபண்ட்டுக்காக வரும். அதைப் போன்று இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் என்னுடைய கஷ்டங்களை உங்களது கஷ்டங்களாக நினைத்து முதல்வரின் அனுமதி பெற்று பார்ட்டி பண்டு என்று ஒன்று தேவையில்லை. அதிகாரிகள் கையெழுத்து போட்டாலே போதும், என் அறைக்கு வர வேண்டாம் என்று கூறி இருக்கின்றேன், அதை முதல்வரின் அனுமதியோடு உத்தரவாகவும் போட்டு இருக்கிறேன்.

அதேபோன்று பில்டிங் அப்ரூவல் என்று சென்றால் அதிக கால தாமதாகிவிடும். ஒரு ஒப்பந்தப் பணியை எடுத்து விட்டால் பணியாளர்கள் கிடைப்பதில் சிரமமாக இருக்கும். அப்படியே பணியாளர்கள் கிடைத்தாலும் அதிகப்படியான ஊதியத்தை கேட்பார்கள். ஒரு அரசு ஒப்பந்த வேலையை செய்வது என்றால் அதன் கோப்புகள் உள்ளே சென்று வெளியே வருவதற்கு கிட்டத்தட்ட ஒரு வருடத்திற்கு மேலாகிவிடும். இவையெல்லாம் இனி நடைபெறாமல் இருக்க மாவட்ட அலுவலகத்திலேயே அனுமதி பெறும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் என்ற இந்த கூட்டமைப்பின் கோரிக்கையை முதல்வரின் கவனத்திற்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுப்பேன் என்று பேசினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.