/

தமிழ்நாடு

இன்றைய செய்திகள் ஜூலை 24 - நேரலை

முக்கிய செய்திகளை உடனுக்குடன் அறிந்துகொள்ள தினமணியுடன் இணைந்திருங்கள்...

இன்றைய செய்திகள் ஜூலை 24 - நேரலை

சோனம் வாங்சுக் உண்ணாவிரத போராட்டத்தை முடித்துக் கொண்டார் - x

Updated On :24 ஜூலை 2026, 11:06 am IST
5:36 am, 24 ஜூலை 2026

செந்தில் பாலாஜி நீதிமன்றம் வருகை

தவெக எம்எல்ஏவிடம் பேரம் பேசிய வழக்கில் முன்ஜாமீன் உத்தரவை பெறுவதற்காக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் இன்று காலை ஆஜரானார்.

5:36 am, 24 ஜூலை 2026

கோரிக்கைகள் நிறைவேற்றப்படுமா?

கரப்பான்பூச்சி ஜனதா கட்சி நிர்வாகிகள் இன்று பகல் 12.30 மணிக்கு மத்திய அமைச்சர் ஜெ.பி. நட்டாவுடன் பேச்சுவார்த்தை மேற்கொள்கின்றனர்.

5:36 am, 24 ஜூலை 2026

தூத்துக்குடி காவல் மரணம்

தூத்துக்குடியில் காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றபோது உயிரிழந்த இளைஞர் அருணாச்சலத்தின் உடல் உடற்கூராய்வுக்குப் பிறகு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

5:36 am, 24 ஜூலை 2026

அதிரடி சரிவு

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (ஜூலை 24) சவரனுக்கு ரூ. 2,160 குறைந்துள்ளது.

5:36 am, 24 ஜூலை 2026

ராகுல் காந்தி காட்டம்

தர்மேந்திர பிரதானை பதவியிலிருந்து நீக்குங்கள், மாணவர்களை தாக்கியவர்களை தண்டியுங்கள் என்றும் நள்ளிரவில் வீடியோ வெளியிட்டு மாணவர்களை போராட்டத்தை அவமதிக்க வேண்டாம் என மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி வலியுறுத்தியுள்ளார்.

5:36 am, 24 ஜூலை 2026

அசாதாரணமான தைரியம்

மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகும் வரை, ஜந்தர் மந்தரில் எங்களின் அமைதியான போராட்டம் தொடரும் என்று அக்கட்சியின் தலைவர் அபிஜீத் தீப்கே தெரிவித்துள்ளார்.

5:36 am, 24 ஜூலை 2026

உண்ணாவிரதத்தை முடித்தார் சோனம்

மத்திய அமைச்சா்கள் ஜெ.பி.நட்டா, ஜிதேந்திர சிங் ஆகியோா் சந்தித்து சோனமிடம் பேச்சுவார்த்தை நடத்திய நிலையில் அவர் தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார்.

5:36 am, 24 ஜூலை 2026

அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவு

நீட் வினாத்தாள் கசிவு விவகாரத்தில் வெள்ளிக்கிழமை(ஜூலை 24) நடைபெறவுள்ள அமைச்சரவைக் கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளதாக பிரதமர் நரேந்திர மோடி செல்ஃபி விடியோ மூலம் விளக்கமளித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.