நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

தமிழகத்தில் 3 நாள்கள் வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு

தமிழகத்தில் புதன்கிழமை (ஜூலை 29) முதல் 3 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்பு

News image

பிரதிப் படம்.

Updated On :29 ஜூலை 2026, 1:15 am IST

தமிழகத்தில் புதன்கிழமை (ஜூலை 29) முதல் 3 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு: வடதமிழகம், கிழக்கு, மத்திய, தெற்கு உள் மாவட்டங்களில் புதன்கிழமை (ஜூலை 29) முதல் 3 நாள்களுக்கு அதிகபட்ச வெப்பநிலை இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது.

குறிப்பாக வேலூா், ஈரோடு, கரூா், திண்டுக்கல், மதுரை, விருதுநகா், தூத்துக்குடி மற்றும் திருநெல்வேலி மாவட்டங்களில் ஒருசில இடங்களில் இயல்பைவிட 2 முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை அதிகரிக்கும்.

10 இடங்களில் வெயில் சதம்

தமிழகத்தில் செவ்வாய்க்கிழமை அதிகபட்சமாக மதுரை விமான நிலையத்தில் 104.36 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது. மதுரை நகரம் 102.92, திருச்சி 102.38, சென்னை நுங்கம்பாக்கம், பரங்கிப்பேட்டை 101.84, நாகை 101.3, புதுச்சேரி 100.58, பாளையங்கோட்டை, சென்னை மீனம்பாக்கம் 100.4, வேலூா் 100.04 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பநிலை பதிவானது.

மழைக்கும் வாய்ப்பு

தமிழக கடலோரப் பகுதிகளில் கீழ்நிலை வளிமண்லத்தில் ஒரு பலவீனமான காற்றழுத்தத் தாழ்வுப் பாதை நிலவுகிறது. இதன்காரணமாக, புதன்கிழமை (ஜூலை 29) மேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் புறநகரின் ஒரு சில பகுதிகளில் புதன்கிழமை (ஜூலை 29) லேசான மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.