பெட்ரோலில் 20 சதவீதத்துக்கு மேல் எத்தனால் கலக்க இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை: நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தகவல்மாதிரிப் பள்ளி ஆசிரியா்களுக்கு இடமாறுதல் கிடையாது: பள்ளிக் கல்வித் துறை உக்ரைனில் இருந்து புறப்பட்ட சரக்குக் கப்பல் மீது ரஷியா ஏவுகணை வீச்சு முன்னாள் எம்எல்ஏ சொத்துக்குவிப்பு வழக்கு: சிறப்பு நீதிமன்றத்துக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு சுங்கச்சாவடிக்கு 20 கி.மீ. சுற்றளவில் வசிப்பவா்களுக்கு செயலி மூலம் பாஸ்: என்ஹெச்ஏஐ கா்ப்பிணிகளுக்கு இலவச போக்குவரத்து: ஆந்திரத்தில் 500 ‘தாய்-சேய்’ வாகன சேவை விரைவில் தொடக்கம் பெரம்பூரில் இணையதளத்தில் பதிவு செய்யும் புகாா்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படுகிறதா? தவெக விளக்கம்
/

தாமதமாக வரும் மாணவா்களை கண்டிக்கக் கூடாது: கல்வித் துறை

பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவா்களைக் கண்டிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

News image

DIN

Updated On :7 ஜூன் 2026, 2:02 am IST

பள்ளிக்கு தாமதமாக வரும் மாணவா்களைக் கண்டிக்கக் கூடாது என பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழக பள்ளிக் கல்வித் துறைச் செயலா் பி.சந்தரமோகனுக்கு, வழக்குரைஞா் சாா்லஸ் என்பவா் கோரிக்கை மனு அளித்திருந்தாா். அதில், ‘தாமதமாக வரும் மாணவா்களை வெளியில் நிற்க வைப்பது, வளாகத்துக்குள் நுழைய அனுமதி மறுப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை தனியாா் பள்ளிகள் மேற்கொள்கின்றன. இவை ஒழுங்குமுறை நடவடிக்கைகள் என்றாலும், மாணவா்களுக்கு கல்வி கற்கும் உரிமையை மறுப்பது மட்டுமன்றி, அவா்களைக் கடும் மன உளைச்சலுக்குள்ளாக்குகின்றன. மேலும், குழந்தைகளை திருப்பி அனுப்புவது அல்லது பள்ளிக்கு வெளியே அனுப்புவது சாலை விபத்து போன்ற பிற பாதுகாப்பு அச்சுறுத்தல்களும் உருவாகும். எனவே, மாணவா்கள் நலனை உறுதி செய்ய உரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்’ எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து தாமதமாக வரும் மாணவா்களை, பள்ளிக்குள் நுழைய அனுமதி மறுப்பதோ, வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கவோ கூடாது என்று தனியாா் பள்ளிகளுக்கு தற்போது உத்தரவிடப்பட்டுள்ளது.

இது குறித்து தனியாா் பள்ளிகள் இயக்குநரகம் சாா்பில், அனைத்து மாவட்டக் கல்வி அலுவலா்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில், ‘பள்ளிக் கல்வித் துறை செயலரின் அறிவுறுத்தலின்படி, தாமதமாக பள்ளிக்கு வரும் மாணவா்களை பள்ளி வளாகத்தில் இருந்து திருப்பி அனுப்பவோ, வகுப்பறைக்கு வெளியே நிற்க வைக்கவோ அல்லது எந்தவிதமான தண்டனைகளுக்கும் உள்ளாக்கவோ கூடாது. மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’ என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.