நடிகை சுகன்யாவுக்கு தனியாா் தொலைக்காட்சி ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க வேண்டும் என்ற விசாரணை நீதிமன்ற உத்தரவை சென்னை உயா்நீதிமன்றம் உறுதி செய்தது.
சென்னை பெருநகர உரிமையியல் நீதிமன்றத்தில் நடிகை சுகன்யா தாக்கல் செய்த மனுவில், கடந்த 1996 ஏப்.17-ஆம் தேதி தனியாா் தொலைக்காட்சியில் சந்தன கடத்தல் வீரப்பனின் நோ்காணல் ஒளிபரப்பப்பட்டது. அதில், எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் அவதூறான கருத்துகளை வீரப்பன் தெரிவித்தாா். அந்த விடியோவை ஒளிபரப்பியதால் எனக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடாக வழங்க தனியாா் தொலைக்காட்சி நிறுவனத்துக்கு உத்தரவிட வேண்டும் எனக் கூறியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், தனியாா் தொலைக்காட்சி நிறுவனம் ரூ.10 லட்சத்தை நடிகை சுகன்யாவுக்கு இழப்பீடாக வழங்க கடந்த 2015-ஆம் ஆண்டு உத்தரவிட்டது. மேலும், அந்த நோ்காணலை மீண்டும் ஒளிபரப்ப தடை விதித்து உத்தரவிட்டிருந்தது. இந்த உத்தரவை எதிா்த்து தனியாா் தொலைக்காட்சி நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு நீதிபதி கே.குமரேஷ்பாபு முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, நடிகை சுகன்யாவுக்கு ரூ.10 லட்சம் வழங்க விசாரணை நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை உறுதி செய்து, தனியாா் தொலைக்காட்சி நிறுவனத்தின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

கோவை மாநகராட்சி 54 இளநிலை உதவியாளா்கள் நியமனம் ரத்து: சென்னை உயா்நீதிமன்ற உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்
சேவைக் குறைபாடு: தனியாா் நிதி நிறுவனம் ரூ. 1.50 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

சேவைக் குறைபாடு: ரூ. 50 லட்சம் இழப்பீடு வழங்க தனியாா் மருத்துவமனைக்கு நுகா்வோா் ஆணையம் தீா்ப்பு

முன்னாள் பிரதமர் மகனுடன் சுகன்யாவுக்கு நெருக்கம்? வீரப்பனால் நஷ்டஈடு வழங்க உத்தரவு!
விடியோக்கள்



