இந்தியா - இலங்கை துறைமுகங்கள் பொருளாதார வளர்ச்சியின் என்ஜின்: ராஜ்நாத் சிங்தட்டாஞ்சாவடி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக சேது என்கிற சேது செல்வம் அறிவிப்புமுதல்வர் விஜய் தலைமையிலான கூட்டணி என்றும் தொடரும்! - காதர் மொகிதீன் உறுதி!மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி தேர்தலுக்கானது இல்லை! - திருமாவளவன் பேச்சு மதச்சார்பற்ற சமூகநீதி வெற்றிக் கூட்டணி! தவெக தலைமையிலாக கூட்டணியின் பெயர்!இடைத்தேர்தல்: தவெக கூட்டணி வேட்பாளர்கள் நாளை (செப். 10) அறிவிப்பு!பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம்! அரசாணை வெளியீடு

இயக்குநர் பாரதிராஜா மறைவு: இறுதி ஊர்வலம் தொடங்கியது!

இயக்குநர் பாரதிராஜாவின் இறுதி ஊர்வலம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

 legendary director Bharathiraja

இயக்குநர் பாரதிராஜா - கோப்புப் படம்

Published On :

திரைப்பட இயக்குநர் பாரதிராஜா (84), உடல்நலக் குறைவு காரணமாக சென்னையில் நேற்று காலமானார். மக்களின் கண்ணீர் கடலில் அவரது இறுதி ஊர்வலம் அல்லிநகரத்தில் தொடங்கியது.

பாரதிராஜாவின் சொந்த ஊரான தேனி மாவட்டம், அல்லி நகரத்தில் உள்ள பண்ணை வீட்டில் அவரது உடல் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டிருந்தது. வீட்டில் இறுதிச் சடங்குகள் செய்யப்பட்டு ஊர்வலமாக பண்ணைத் தோட்டத்துக்குக் கொண்டு வரப்படுகிறது.

நடிகர், நடிகைகள், இயக்குநர்கள், திரைப்பட கலைஞர்கள், ஊர் மக்கள், உறவினர்கள் என பலரும் இறுதிச் சடங்கு நடைபெறும் இடத்தில் குழுமியிருக்கிறார்கள்.

இயக்குநர் பாரதிராஜா இறுதிச் சடங்குக்கு அரசு மரியாதை வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜோசப் விஜய் அறிவித்திருந்தார்.

இதையடுத்து 72 குண்டுகள் முழங்க பாரதிராஜாவுக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவிருக்கின்றன. இதற்காக தயார் நிலையில் காவலர்கள் அணிவகுத்து நிற்கின்றனர். நல்லடக்கம் நடைபெறும் இடத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்திருக்கிறார்கள்.

பண்ணை வீட்டிலிருந்து ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு, தேவதானப்பட்டி, காட்ரோடு பகுதியில் உள்ள பண்ணைத் தோப்பில் நல்லடக்கம் செய்யப்படுகிறது.

தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் நிர்மல்குமார், வன்னி அரசு ஆகியோர் பாரதிராஜா உடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினர்.

Summary

Director Bharathiraja's funeral procession has begun and is currently underway.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.