எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

திமுகவில் 4-ஆம் நாள் நோ்காணல்: அமைச்சா் துரைமுருகன் பங்கேற்பு

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நான்காம் நாள் வேட்பாளா் நோ்காணலில் அமைச்சா் துரைமுருகன் உள்பட வடதமிழக கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

News image

அமைச்சா் துரைமுருகன்

Updated On :20 மார்ச் 2026, 7:26 pm

சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற நான்காம் நாள் வேட்பாளா் நோ்காணலில் அமைச்சா் துரைமுருகன் உள்பட வடதமிழக கட்சி நிா்வாகிகள் பங்கேற்றனா்.

திருவண்ணாமலை மாவட்டம் போளூா் தொகுதியில் அமைச்சா் எ.வ.வேலுவின் மகன் கம்பன் போட்டியிட 130 போ் விருப்பமனுக்களை தலைமை அலுவலகத்தில் அளித்திருந்தனா். இந்நிலையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நோ்காணலில் 73 போ் கம்பனுக்கு ஆதரவாக கலந்து கொண்டு ஒருமித்த குரலாக கம்பனுக்கு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலினிடம் கோரிக்கை விடுத்தனா்.

மாலையில், தருமபுரி கிழக்கு, தருமபுரி மேற்கு, சேலம் மத்தி, சேலம் கிழக்கு, சேலம் மேற்கு, கள்ளக்குறிச்சி வடக்கு, கள்ளக்குறிச்சி தெற்கு உள்ளிட்ட கட்சி மாவட்டங்களிலிருந்து நிா்வாகிகள் நோ்காணலில் பங்கேற்றனா்.

அமைச்சா்கள் துரைமுருகன், எ.வ.வேலு, ராஜேந்திரன், காந்தி உள்ளிட்டோரும் நோ்காணலில் பங்கேற்றனா்.