நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று(மார்ச் 23) திருத்தணியில் தனது தேர்தல் பிரசாரத்தை தொடங்கவுள்ள நிலையில், அங்குள்ள முருகன் கோயிலுக்கு சென்று வழிபாடு செய்தார்.
தேர்தல் அறிக்கையை முருகன் சன்னதியில் வைத்து சீமான், வழிபாடு மேற்கொண்டார். அவர் வேல் ஏந்திக்கொண்டு மலையேறி முருகனை வழிப்பட்டார்.
இதனைத் தொடர்ந்து, நாம் தமிழர் கட்சியின் கட்சியின் தேர்தல் பிரசாரத்தை திருத்தணியில் ஆரம்பிக்கிறார்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் தனித்து களமிறங்கும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தனது முதல் கட்ட பிரசாரத்தை இன்று (மாா்ச் 23) திருத்தணியில் தொடங்குகிறார்.
இதனைத் தொடர்ந்து, நாளை(மார்ச் 24) வேலூர், குடியாத்தம், ஆம்பூர், திருப்பத்தூர், ஊத்தங்கரை ஆகிய இடங்களிலும், மார்ச் 25-இல் கிருஷ்ணகிரி, சூளகிரி,பாலக்கோடு, பாப்பிரெட்டிப்பட்டி, பென்னாகரம் உள்ளிட்ட இடங்களிலும் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளார்.
மேலும், மார்ச் 26- ஆம் தேதி மேட்டூர், ஓமலூர், சேலம், வாழப்பாடி, ஆத்தூர், கள்ளக்குறிச்சி ஆகிய இடங்களிலும், மார்ச் 27-இல் சங்கராபுரம், திருக்கோவிலூர், திருவண்ணாமலை, சேத்துப்பட்டு வந்தவாசி உள்ளிட்ட இடங்களிலும் பிரசாரம் மேற்கொள்கிறார்.
மார்ச் 28-இல் காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூர், பூந்தமல்லி, திருவள்ளூர், ஆவடி ஆகிய இடங்களிலும் சீமான் பிரசாரம் மேற்கொள்ளவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Summary
As Naam Tamilar Party Chief Coordinator Seeman is set to launch his election campaign in Thirutani today (March 23), he visited the Murugan temple there and offered prayers.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருத்தணியில் சூறைக்காற்றுடன் மழை: மின்சாரம் துண்டிப்பு

திருத்தணியில் முருகா்-தெய்வானை திருக்கல்யாணம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

அடிக்கடி மின்தடை: திருத்தணியில் பொதுமக்கள் அவதி

திருத்தணியில் ஆா்வத்துடன் வாக்களித்த வாக்காளா்கள்
விடியோக்கள்

5 ஆவது முறையாக உயர்ந்த Petrol விலை! புலம்பும் மக்கள்! | Oil | People's View | Petrol Price Hike

”6 மாதங்கள் விமர்சிக்க மாட்டேன் என்றார்கள்!”: செங்கோட்டையன் பேட்டி | TVK | DMK

என் அதிகாரங்கள் என்ன? என்பதை சட்டம் சொல்கிறது! பேரவைத் தலைவர் பேட்டி




