தேசிய கட்சியின் தலைவர்கள் தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர்.
தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலும், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் சாத்தூர் தொகுதியிலும் தோல்வி அடைந்துள்ளனர்.
தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று (மே 4) எண்ணப்பட்டு வருகின்றன. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தொடர்ந்து வாக்குப் பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.
இதில் ஆளும் திமுக கூட்டணி அரசை பின்னுக்குத்தள்ளி தமிழக வெற்றிக் கழகம் பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. இரவு 10 மணி நிலவரப்படி தவெக 100 தொகுதிகளில் வெற்றி பெற்று 7 தொகுதிகளில் முன்னிலை பெற்றுள்ளது. ஆளும் திமுக 56 இடங்களில் வெற்றி பெற்று 4 இடங்களில் முன்னிலையில் இருந்து வருகிறது. அதிமுக 45 இடங்களில் வெற்றி பெற்று 2 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.
இதனிடையே திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் 28 தொகுதிகளில் போட்டியிட்டது. இதில், காங்கிரஸ் கட்சி 5 தொகுதிகளில் வெற்றி பெற்றது. எனினும் காங்கிரஸ் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் தோல்வி அடைந்தார். இவர் 93,365 வாக்குகளைப் பெற்றார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட தவெக வேட்பாளர் 54246 வாக்குகள் கூடுதலாகப் பெற்று வெற்றி பெற்றார்.
இதேபோன்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட திமுக வேட்பாளர் கடற்கரைராஜிடம் 5989 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். நயினார் நாகேந்திரன் 56,071 வாக்குகளைப் பெற்றார். திமுக வேட்பாளர் 62,060 வாக்குகளைப் பெற்றார்.
Summary
Tn Election result 2026 Leaders of National Parties Defeated in Tamil Nadu
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வெற்றி, தோல்வி திமுகவை பாதிக்காது: டி.கே.எஸ். இளங்கோவன்

தோ்தல் தோல்வி: அன்புமணி ராமதாஸ் கருத்துக்கேட்பு

தருமபுரியில் செளமியா அன்புமணி வெற்றி!

முதல்வர் பதவியிலிருந்தபோது தேர்தலில் தோற்ற முதல்வர்கள்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



