தவெக அமைச்சரவையில் விசிக இணைந்ததற்கு பதவி ஆசை காரணம் இல்லை: திருமாவளவன் விளக்கம்சிபிஎஸ்இ விடைத்தாள் மறுமதிப்பீடு செய்ய ரூ.69 ஆயிரம் கட்டணம்! உண்மை என்ன?எங்கள் கையெழுத்தையே படிக்க முடியவில்லை: சிபிஎஸ்இ மாணவர்கள் அதிருப்திசென்னையில் வானம் மேகமூட்டம்! மெரினாவில் வீசிய சூறைக்காற்று!கோவை சிறுமி கொலை: கோவை அரசு மருத்துவமனையில் போலீஸ் குவிப்புமதுரை மீனாட்சி அம்மன் திருக்கோயில் வைகாசி வசந்த உற்சவம்! பக்தர்கள் சுவாமி தரிசனம்!நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை 118.4 டிகிரியை தொடுகிறது! மே 28 வரை எச்சரிக்கைநீட் தோ்வுக்கு குறுகிய கால பயிற்சி இன்று தொடக்கம்3 புதிய மெட்ரோ வழித்தடங்கள்: டிசம்பரில் பயன்பாட்டிற்குக் கொண்டுவர டிஎம்ஆா்சி திட்டம்
/

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அமலாக்கத் துறை கடிதம்?

முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கில் விசாரிக்க அனுமதிகோரி, தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியுள்ளதாகத் தகவல்

News image

அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதிகோரி கடிதம் - கோப்புப் படம்

Updated On :23 மே 2026, 11:32 am IST

திமுக முன்னாள் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் மீதான வழக்கில் விசாரிக்க அனுமதிகோரி, தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

முன்னாள் மாநில அமைச்சரும் திமுக மூத்த தலைவருமான அனிதா ராதாகிருஷ்ணன் மீது பணமோசடி வழக்கு ஒன்றில் சட்டவிரோத பணப் பரிவர்த்தனை நடந்ததாக அமலாக்கத்துறை குற்றஞ்சாட்டி உள்ளது.

இதுதொடர்பாக, முந்தைய திமுக ஆட்சியின்போது அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதிக்குமாறு தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியது. இருப்பினும், அவரை விசாரிக்க அமலாக்கத் துறைக்கு திமுக அரசு அனுமதி வழங்கவில்லை.

இந்த நிலையில், அனிதா ராதாகிருஷ்ணனை விசாரிக்க அனுமதிகோரி, தற்போதைய தவெக தலைமையிலான தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை மீண்டும் கடிதம் எழுதியுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தகவல்களின்படி, அமலாக்கத் துறை அனுப்பியதாகக் கூறப்படும் கடிதம் 4 பக்கங்களுடன் பாரதிய நாகரிக் சுரக்‌ஷா சன்ஹிதாவின் 218-வது பிரிவை மேற்கொள் காட்டுவதாகக் கூறப்படுகிறது. இந்தப் பிரிவின்படி, அனுமதி கோரும் மனுவைப் பெற்ற 120 நாள்களுக்குள் மாநில அரசு பதிலளிக்க வேண்டும். இல்லையெனில், அனுமதி வழங்கப்பட்டதாகக் கருதப்படும்.

சமீபத்தில், முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜி மீதான வழக்கை விசாரிக்கவும் அனுமதிகோரி தமிழக அரசுக்கு அமலாக்கத் துறை கடிதம் அனுப்பியிருந்தது குறிப்பிடத்தக்கது.

Summary

ED Seeks Sanction To Prosecute Another Former DMK Minister Anitha R Radhakrishnan

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.