மத நல்லிணக்கத்தை நிலைநிறுத்திய தவெக அரசுக்குப் பாராட்டுகள்: சு. வெங்கடேசன் எம்பி
தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை நிலைநிறுத்தியதாக த.வெ.க. அரசுக்கு சு. வெங்கடேசன் எம்பி பாராட்டு தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தை நிலைநிறுத்தியதாக த.வெ.க. அரசுக்கு சு. வெங்கடேசன் எம்பி பாராட்டு தெரிவித்துள்ளார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தூணில் கார்த்திகை தீபம் ஏற்ற உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், அங்கு தீபம் ஏற்றப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. இதனைத் தொடர்ந்து, பாஜக மற்றும் ஹிந்து அமைப்புகளைச் சேர்ந்த பலரும் மலை அடிவாரத்தில் கூடினர்.
இதனைத் தொடர்ந்து, திருப்பரங்குன்றத்தில் மூலவரின் சிரசுக்கு நேர் மேல் உள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகிலுள்ள தீப மண்டபத்தில் கார்த்திகை மகாதீபம் ஏற்றப்பட்டது
நூற்றுக்கும் மேற்பட்ட காவல்துறையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ள நிலையில், மலை மேலுள்ள தூணில் தீபம் ஏற்றப்படவில்லை. இதனால், அங்கு ஹிந்து அமைப்பினர் பலரும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
மலை மேல் உள்ள தூணில் தீபம் ஏற்றாமல் மத நல்லிணக்கத்தை தவெக அரசு நிலைநிறுத்தியுள்ளதாக சு. வெங்கடேசன் எம்பி பாராட்டியுள்ளார்.
அவரது பதிவில், “திருப்பரங்குன்றம் முருகப்பெருமானின் சிரசின் மேல் அமைந்துள்ள உச்சிப்பிள்ளையார் கோயில் அருகாமை கல் தூண் மண்டபத்தில் திருக்கார்த்திகை தீபம் சுடர்வீசுகிறது.
திருப்பரங்குன்றம் கோவிலின் வழக்கத்தையும், மரபுகளையும், ஆகமங்களையும் சேர்த்து தமிழ்நாட்டின் மத நல்லிணக்கத்தையும் நிலைநிறுத்திய த.வெ.க. அரசுக்குப் பாராட்டுகள்.
வழக்கம்போல இந்த ஆண்டும் ஒற்றுமைச் சுடரை ஒளிரவிட்ட மதுரை மக்களுக்கு நன்றி! பக்தர்கள் அனைவருக்கும் திருக்கார்த்திகை திருநாள் வாழ்த்துகள்” எனப் பதிவிட்டுள்ளார்.
Summary
MP Su. Venkatesan has commended the TVK government for upholding religious harmony in Tamil Nadu.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

